இராஜபாளையம், மார்ச் 6- விருதுநகர் மாவட்டம் இராஜ பாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில் துண்டு, காடா துணி, சேலை போன்ற ரகங்கள் விசைத் தறி மூலம் நெசவு செய்யப்பட்டு வருகிறது. தளவாய்புரம் வட்டாரத்தில் மட் டும் ஆயிரம் விசைத்தறிகள் உள் ளன. இதில் 500 தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர் களுக்கு விசைத்தறி உரிமையா ளர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தை ஒப்பந்தப்படி 3 ஆண்டு களுக்கு கூலி உயர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. தற்போது மூன்றாவது ஆண் டாக 5 சதவீத கூலி உயர்வு வழங்க வேண்டிய நிலையில் கூலி உயர்வு கொடுக்க விசைத்தறி உரிமையா ளர்கள் மறுத்தனர். நூல் விலை உயர்வு, மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக சிரமப்பட்டு விசை தறியை இயக்குவதாக உரி மையாளர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக கடந்த 15 நாட்களாக வேலைநிறுத்த போராட் டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பல கோடி மதிப் புள்ள உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. சிஐடியு மற்றும் ஏஐடியுசி தொழிற்சங்கங்கள் சார் பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் பிப்ரவரி 6 ஆம் தேதி கஞ்சி தொட்டி திறப்பு போராட் டம் நடத்த இருப்பதாக அறிவிப்பு செய்திருந்தனர். அதன் பேரில் புத னன்று போராட்டத்திற்கு தயாரா கிக் கொண்டிருக்கும் போது விருது நகர் மாவட்ட தொழிலாளர் நலத் துறை உதவி ஆணையாளர் வெங்க டேஷ், கைத்தறித்துறை உதவி இயக்குநர் கவிதா, இராஜபாளை யம் வட்டாட்சியர் ராமசுப்பிரமணி யன் உட்பட அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். சிஐடியு சார்பில் மாவட்டத் தலைவர் மகாலட்சுமி, கைத்தறி தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன், ஏஐடி யுசி சார்பில் அய்யனார், அய்ய னப்பன் உள்பட ஏராளமான தொழி லாளர்கள் பங்கேற்றனர். இதில், வெள்ளியன்று மதுரை தொழிலாளர் நலத்துறை அலுவல கத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும், எனவே தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிடுமாறும் அதிகாரிகள் கேட் டுக் கொண்டனர். அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று கஞ்சித் தொட்டி திறப்பு போராட்டம் தற்கா லிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தொழிற்சங்கம் சார்பில் அறிவிக் கப்பட்டு அனைத்து தொழிலாளர் களும் கலைந்து சென்றனர்.