மானாமதுரை, மார்ச் 4- சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூர் திமுக சார்பில் இளையான் குடி, புதூர், கீழாயூர் ஆகிய இடங்களில் பொதுமக்க ளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செவ்வா யன்று நடைபெற்றது. விழாவுக்கு கட்சியின் பேரூர் செயலரும், பேரூராட் சித் தலைவருமான பி.ஏ. நஜுமுதீன் தலைமை வகித் தார். முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் சுப.மதி யரசன் முன்னிலை வகித்தார். மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார் 500 பயனாளிகளுக்கு தலா 5 கிலோ வீதம் அரிசிப் பை களை வழங்கிப் பேசினார். இதில் பேரூராட்சி துணைத் தலைவர் இப்ரா ஹிம், கண்ணமங்கலம் கூட்டு றவுச் சங்க முன்னாள் தலை வர் சுப.தமிழரசன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் காளிமுத்து, பேரூர் கழகத் துணைச் செய லர் உமர் சுத்தாப் உள்பட பலர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து, மானாமதுரையில் தகவல் தொழில்நுட்ப மகளிர் அணி ஒருங்கிணைப்பாளரும், நகர்மன்ற உறுப்பினருமான இந்துமதி திருமுருகன் சார் பில், சி.எஸ்.ஐ. செவித்திறன் குறைவுடையோர் உயர் நிலைப் பள்ளி மாணவ, மாண விகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி ரவிக் குமார், நகர்மன்றத் தலை வர் எஸ்.மாரியப்பன் கென் னடி, துணைத் தலைவர் பால சுந்தரம், திமுக நகரச் செய லர் கே. பொன்னுச்சாமி, நகர வைத் தலைவர் ரவிச்சந்தி ரன், பொருளாளர் ஜி.மயில் வாகனன், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட அமை ப்பாளர் அன்பரசன் உள் ளிட்டோர் கலந்து கொண்ட னர்.