districts

திருச்சி முக்கிய செய்திகள்

விருதுநகரில் பிளஸ் 2 பொதுத் தேர்வு ஆங்கிலப் பாடத் தேர்வை  21,835 பேர் எழுதினர்  

விருதுநகர், மார்ச் 3- விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு ஆங்கிலப் பாடத் தேர்வினை 21835 பேர் எழுதினர். தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு திங்  களன்று நடந்தது. இந்நிலையில் வியாழக் கிழமை ஆங்கி லத் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 22,174 பேர் தேர்வு  எழுதவுள்ள நிலையில் 21,835 பேர் தேர்வு எழுதினர். இதில், 180 மாணவர்கள், 159 மாணவிகள் என மொத்தம்  339 பேர் தேர்வு எழுதவில்லை.

பரமக்குடியில் இளைஞர்  வெட்டிக் கொலை உறவினர்கள் சாலை மறியல்

இராமநாதபுரம், மார்ச் 6- இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இளை ஞர் உத்திரகுமார் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்  பட்ட சம்பவத்தில் அவரது உறவினர்கள் அரசு மருத்துவ மனை முன்பு சாலை மறியல் செய்தனர். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இரவு மூன்று  பேர் கொண்ட கும்பல் உத்திரகுமார்(35) என்ற இளை ஞரை வெட்டி கொலை செய்தது. இதில் குற்றவாளி களை கைது செய்யக் கோரி உடலை வாங்க மறுத்து அவ ரது உறவினர்கள் மதுரை -இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்  சாலையில் பரமக்குடி அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.  போலீசார் உடனடியாக அப்புறப்படுத்தினர். பர மக்குடி அரசு மருத்துவமனை முன்பு போலீஸார் குவிக்  கப்பட்டிருந்தனர். இச்சம்பவத்தினால் மதுரை -இராமேஸ்வரம் நெடுஞ்சாலையின் இருபுறமும் வாக னங்கள் அணிவகுத்து நின்றதுடன் பெரும் பரபரப்பு நிலவியது.

புகையிலை விற்ற கடைக்கு சீல்

இராஜபாளையம், மார்ச் 6- விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தர வின் பேரில் விருதுநகர் உணவு பாதுகாப்பு நியமன அலு வலர் டாக்டர் செல்வராஜ் மற்றும் ராஜபாளையம் உணவு  பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் இராஜ பாளையம் அருகே உள்ள சங்கரபாண்டியபுரம் கிரா மத்தில் கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.  இதில் சங்கரபாண்டியபுரம் பகுதியில் மயில்சாமி என்பவரது பெட்டிக்கடையில் சோதனையின்போது அர சால் தடை செய்யப்பட்ட கூல் லிப் 100 எண்ணமும், 150  புகையிலை பாக்கெட்டுகளும் கைப்பற்றப்பட்டன. கடை  உரிமையாளர் மயில்சாமிக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டு, 15 நாட்கள் கடையை பூட்டி சீல் வைக்கப் பட்டது.  உணவு பாதுகாப்பு அலுவலர்களுடன் சிறப்பு சார்பு  ஆய்வாளர் திருப்பதி ராஜ் மற்றும் தலைமைக் காவ லர் குலசேகர பாண்டியன் ஆகியோர் இருந்தனர்.

புதிய வருவாய் கிராமம் பிரிப்பு: மார்ச் 11 இல் கருத்துக்கேட்பு

விருதுநகர், மார்ச் 6- அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியின் விரி வாக்கப் பகுதியை கிழக்கு, மேற்கு என புதிய வருவாய்  கிராமம் அமைக்க மார்ச் 11 இல் கருத்துக் கேட்புக் கூட்டம்  நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்  குறிப்பில் கூறியதாவது: அருப்புக்கோட்டை வட்டம், பாலையம்பட்டி குறு வட்டத்தில் உள்ள பாலையம்பட்டி முதல்நிலை ஊராட்சி யின் விரிவாக்கப் பகுதியினை பிரித்து பாலையம்பட்டி கிழக்கு மற்றும் பாலையம்பட்டி மேற்கு என புதிய வரு வாய் கிராமம் ஏற்படுத்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடை பெற உள்ளது. இக்கூட்டமானது வரும் மார்ச் 11 அன்று மாலை 4  மணிக்கு விஜய் மஹாலில் மாவட்ட வருவாய் அலுவலர்  தலைமையில் நடைபெற உள்ளது. எனவே, பாலை யம்பட்டி பகுதியினர்  அதில் கலந்து கொண்டு கருத்துக்  களை தெரிவிக்கலாம் என அந்த செய்திக் குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது. 

மனைவியை கொலை செய்து தீ வைத்து எரித்த கணவன்

வெம்பக்கோட்டை, மார்ச் 6- விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை  அருகே மனைவியை அடித்துக் கொலை செய்த கணவன்  தீ வைத்  தும் எரித்துள்ளார். வெம்பக்கோட்டை அருகேயுள்ளது தாயில்பட்டி. இங்  குள்ள கலைஞர் காலனியைச் சேர்ந்தவர் பொன்னுச் சாமி (40). இவரது மனைவி முனீஸ்வரி (35 ).   இருவரும்   பட்டாசு ஆலைத் தொழிலாளர்கள். 3 பெண் குழந்தை கள் உள்ளனர். இந்த நிலையில் இருவருக்குமிடையே அடிக்கடி   குடும்ப பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், புதனன்று இரவு வழக்கம் போல மீண்டு தகராறு ஏற்பட்ட தாம். அப்போது குடிபோதையில் இருந்த பொன்னுச் சாமி,  மனைவி முனீஸ்வரியை கல்லால் தாக்கியுள்ளார். இதில்,  பலத்த காயமடைந்த முனீஸ்வரி சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார்.   இதையடுத்து, தனது மோட்டார் சைக்கிள்களில் இருந்த  பெட்ரோலை எடுத்து  பொன்னுச்சாமி முனீஸ்வரி  உடல் மீது வைத்துள்ளார். அப்போது தீயானது பொன்  னுச்சாமி மீதும் பரவியது.   இதில் அவர் தீக்காயமடைந் தார். இது குறித்து வெம்பக்கோட்டைபோலீசார்  வழக்கு  பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பன்னாட்டு கருத்தரங்கு

சின்னாளப்பட்டி, மார்ச் 6- காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேதி யியல் துறை சார்பாக 2 நாள் பன்னாட்டு கருத்தரங்கு வியாழனன்று நடைபெற்றது. வேதியியல் துறைத் தலைவர் இளங்கோ வர வேற்புரை நிகழ்த்தினார். துணைவேந்தர் என்.பஞ்சநதம் தலைமை உரையாற்றினார். தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கிருஷ்ணன் பேசினார்.  அறிவியல் புலதலைவர் பேரா.எம்.ஜி.சேதுராமன் சிறப்புரை நிகழ்த்தினார். கே.கே.சதீஷ்குமார் விளக்கி பேசினார்.

முதுகுளத்தூர் வேளாண் அலுவலகத்தில் பருத்தி, மிளகாய் குறித்து கலந்துரையாடல்

இராமநாதபுரம், மார்ச் 6-  இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூ ரில் வேளாண்மை உதவி இயக்குநர் அலு வலகத்தில் பருத்தி மற்றும் மிளகாய் விவ சாயிகள், வியாபாரிகள், விஞ்ஞானிகள், துறை அலுவலர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இராமநாதபுரம் வேளாண்மை இணை  இயக்குநர் ஆர்.மோகன்ராஜ் தலைமை வகித்தார். இராமநாதபுரம் மாவட்ட உதவி  வேளாண்மை அலுவலர் பாஸ்கரமணியன் முன்னிலை வகித்தார். முதுகுளத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன் அனைவரையும் வரவேற்றார். குயவன் குடி வேளாண்மை அறிவியல் நிலையம் பேரா. வள்ளல்கண்ணன், தோட்டக்கலை துணை இயக்குநர் ஆறு முகம், இராமநாதபுரம் வேளாண் விற்பனை  நிலைய துணை இயக்குநர் மா.கோபால கிருஷ்ணன், கோயம்புத்தூர் டி.பூச்சியப் பன், கோயம்புத்தூர் காட்டன்கார்பரேசன் சீனியர் கமர்சியல் அதிகாரி டி.எஸ்.சர வணன், அச்சங்குளம் ஸ்பின்னிங் மில் பேக்டரி மேனேஜர் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர். ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவ சாயிகள் உற்பத்தி செய்த பருத்தி மற்றும் மிளகாய் வத்தலை விற்பனை செய்தால் 3  நாளில் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பு கிறோம் என உத்தரவாதம் அளித்தனர். பருத்தி மிளகாய்க்கு கமிஷன் 6% வியாபாரி கள் எடுக்கிறார்கள். எனவே அரசே நேரடி  கொள்முதல் செய்ய கேட்டுக் கொண்டனர்.  விவசாயிகளின் கோரிக்கைகளையும் வியாபாரிகள் மற்றும் தொழில்நுட்ப அறி ஞர்களின் கருத்துக்களை மாவட்ட ஆட்சி யர் சிம்ரன்ஜித் சிங் காலோன் ஆய்வு செய்  தார். இராமநாதபுரம் ஒருங்குமுறை விற்பனை கூட செயலாளர் மல்லிகா கலந்து ரையாடலை தொகுத்து வழங்கினார். முடி வில் முதுகுளத்தூர் வேளாண்மை அலு வலர் நன்றி கூறினார்.

புதிய சார்பதிவாளர் அலுவலகம் காணொலி மூலம் முதல்வர் திறந்தார்

இராஜபாளையம், மார்ச் 6- விருதுநகர் மாவட்டம் இராஜபாளை யம் பெரிய கடை பஜார் பகுதியில் ஏற்க னவே இருந்த சார் பதிவாளர் அலுவல கத்தை சீரமைத்து ரூ.1.88 லட்சம் மதிப்பீட்  டில் புதிதாக கட்டப்பட்டது.  இந்த சார்பதிவாளர் அலுவலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். இராஜபாளையம் சார்பதிவாளர் அலுவல கத்தில் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டி யன், தமிழ்நாடு சீர்மரபினர் வாரிய துணைத்  தலைவர் ராசா அருண்மொழி, நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். மேலும் மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்)  பூபதி, மாவட்ட பதிவாளர் (தணிக்கை) குண சேகரன், திமுக நகரச் செயலாளர் மணி கண்ட ராஜா, ராமமூர்த்தி உள்பட பலர்  கலந்து கொண்டனர். முடிவில் சார்பதிவா ளர் முத்துசாமி நன்றி கூறினார்.

இந்தி குறித்த கேள்விக்கு  பாஜக மாநிலத் தலைவர் நழுவல்

மதுரை, பிப்.6- மும்மொழிக் கொள்கையை ஆதரித்து பாஜக சார்பில்  கையெழுத்து இயக்கம் நடைபெற்ற வரும் நிலையில், வியாழனன்று மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 50 வது வார்டு எல்என்டி அக்ரஹாரத்தில் பாஜக மாநில தலைவர் இராம.சீனிவாசன், மாவட்டத் தலைவர் மாரி  சக்கரவர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் துவக்கிவைத்தனர். அப்போது அவர்கள் தேர்ந்தெடுத்த சில நபர்களிடம் இராம.சீனிவாசனை அழைத்துச் சென்று மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்துக்களை பெற்ற னர். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாஜக மேற்கொண்டுள்ள கையெழுத்து இயக்கம் இந்தி  மொழிக்கானது அல்ல என்றார். மாநில அரசின் பட்டியலுக்குக் கொண்டு வந்தால், இரு மொழி, மும்மொழி என்ற பிரச்சனையே எழாதே என்ற  கேள்விக்கு, இராம.ஸ்ரீனிவாசன் நேரடியாக பதிலளிக்கா மல், நாங்கள் அதை செய்யவில்லை என்றார்.  நீங்கள் செய்யவில்லை என்றாலும் பிரதமர் மோடி யால் கல்வியை மாநில அரசின் பட்டியலுக்கு கொண்டு வர முடியுமல்லவா எனக் கேட்டதற்கு, வெவ்வேறு மாநி லங்களுக்கு தாவிச் சென்றார். ராமர் கோவில் கட்டு வதற்கு ஏன் ஆதரவளிக்கவில்லை என்று சம்பந்தமின்றி பேசினார். பின்னர், இரு மொழிக்கொள்கை திமுகவின் நிலை. மும்மொழிக் கொள்கை பாஜகவின் நிலை என்றார்.  மும்மொழி என்றால் மூன்றாவது மொழி “இந்தி தானே”  எனக் கேட்டதற்கு, அந்தக் கூட்டத்தில் இருந்த பாஜக பிர முகர் இந்தி என்றார். மும்மொழிக் கொள்கை என்கிறீர்கள், காரைக்குடி யில் உள்ள கேந்திரிய வித்தியாலயா பள்ளிக்கு காண்ட்  ராக்ட் அடிப்படையில் தமிழாசிரியர்கள் நியமிக்கப்படு கின்றனரே, ஏன் நிரந்தரமாக நியமிக்கப்படவில்லை என்று  கேட்டதற்கு, தமிழகத்தில் பல்வேறு கல்லூரிகளில், அரசு பள்ளிகளில் காண்ட்ராக்ட் அடிப்படையில் ஆசிரி யர் நியமிக்கப்படாமலா உள்ளனர் என எதிர் கேள்வி கேட்டார்.

பழனி- திருச்சி சமயபுரத்திற்கு குதிரை வண்டியில் சென்று திரும்பிய பக்தர்கள் 

ஒட்டன்சத்திரம், மார்ச் 7- பழனியில் இருந்து திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு குதிரை வண்டியில் சென்று திரும்பிய பக்தர்கள் ஒட்டன்சத்திரம் வழியாக கடந்து சென்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி பாளையம் பகுதியைச்  சேர்ந்த பக்தர்கள் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவி லுக்கு 11 குதிரை வண்டிகளில் தனித்தனியாக கடந்த வாரம்  வியாழக்கிழமை (27.2.25) புறப்பட்டு ஒட்டன்சத்திரம், வேட சந்தூர், அய்யலூர், வையம்பட்டி, மணப்பாறை, திருச்சி  வழியாக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு 200 கிலோ  மீட்டர் தூரம் கடந்து செவ்வாய்கிழமை (4.3.25) சென்றனர். அங்கு ஒரு நாள் தங்கி புதன்கிழமையன்று சமயபுரத்தி லிருந்து புறப்பட்டு சென்ற வழியாக குதிரை வண்டி களில் மீண்டும் திரும்பி வந்தனர். வியாழனன்று வேட சந்தூர் - ஒட்டன்சத்திரம் சாலையில் கேதையுறும்பை கடந்து சென்றனர்.

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

நத்தம், மார்ச் 7- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிரங்காட்டுபட்டி யை சேர்ந்தவர் பாலமுருகன் (25). இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.  இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் கடந்த  3 ஆம் தேதி விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.  ஆபத்தான நிலையில் நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு  சிகிச்சை பலனில்லாமல் பாலமுருகன் புதனன்று இறந்து விட்டார். இச்சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்குப்  பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

நத்தம், மார்ச் 6- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பூதகுடியைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(30). கூலித் தொழிலாளி. இவர் குடிப்  பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் குடும்பத் திற்குள் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.  இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் புத னன்று மதுவில் விஷத்தை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நத்தம் போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸ்- சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி

மதுரை, மார்ச் 6- மதுரை ஆரப்பாளையம் கண்மாய்கரை பகுதி யைச் சேர்ந்தவர் வெங்கடேசன்( 44). தனியார் மருத்துவ மனையில் மேலாளராக வேலை செய்து வருகிறார்.  இவரிடம் கூடல்நகர் பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவர் அறிமுகமாகி உள்ளார்.மேலும் அவர், தமிழ் நாடு மின்சார வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி வரு வதாகவும், யூனியன் தலைவராக இருப்பதாகவும், தனக்கு  தெரிந்த நபர்கள் மூலம் அரசு வேலை வாங்கித்தருவ தாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய வெங்கடேசன், ரூ. 4 லட்சத்து 52 ஆயிரத்தை பல்வேறு  தவணைகளாக அவரிடம் கொடுத்துள்ளார். இதற்கி டையே, வெங்கடேசனை சென்னைக்கு வரவழைத்து போலி நியமன ஆணைகளை அவர் வழங்கி உள்ளார்.  இதனால் நான் ஏமாற்றப்பட்டதைஅறிந்த வெங்க டேசன், உதயகுமாரிடம் கேட்டபோது, ரூ.50 ஆயி ரத்தை மட்டும் திருப்பி கொடுத்து விட்டு மீதமுள்ள பணத்தை கொடுக்காமல் மோசடி செய்துள்ளார்.  இதுகுறித்து பாதிக்கப்பட்ட வெங்கடேசன், கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் உதயகுமார் மீது  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்: பொதுக் கூட்ட மேடையில் நிர்வாகியை அறைந்த முன்னாள் அமைச்சர்

விருதுநகர், மார்ச் 6- விருதுநகரில் நடைபெற்ற பொதுக்கூட்ட மேடையில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி,  அதிமுக நிர்வாகியை ஓங்கி அறைந் தார்.   விருதுநகர் தேசபந்து மைதா னத்தில் புதனன்று  இரவு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் விஜய குமரன் தலைமை தாங்கினார். இதில்  முன்னாள் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திர பாலாஜி, மாஃபா.பாண்டிய ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.   இக்கூட்டத்தின் துவக்கத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு பொன்னாடை அணிவித்து வெள்ளி வாள் வழங்கப்பட்டது. அப்போது, விருதுநகர் கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர்  மன்ற துணைச் செயலாளர் நந்த குமார் என்பவர், முதலில் முன்னாள்  அமைச்சர் மாஃபா க.பாண்டியராஜ னுக்கு பொன்னாடை அணிவித்தார். இதனால், ஆத்திரமடைந்த கே.டி. ராஜேந்திர பாலாஜி, நந்தகுமாரை பொதுக் கூட்ட மேடை என்றும் பாரா மல் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். மேலும், கே.டி.ராஜேந்திரபாலாஜி,   நந்தகுமாரை என்னை எதிர்த்து அரசியல் செய்கிறீர்களா? எனவும் தெரி வித்துள்ளார்.     ஏற்கனவே, அதிமுகவில் உட்கட்சி பூசல் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவி வருகிறது. தற்போது விருதுநகரிலும் அந்த நோய் பற்றிக் கொண்டது என  அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரி வித்தனர்.