tamilnadu

img

அடுத்த 3 ஆண்டுகளில் விண்கலம் தயாரிப்பை மூன்று மடங்காக அதிகரிக்க திட்டம்!

அடுத்த 3 ஆண்டுகளில் விண்கலம் தயாரிப்பை  மூன்று மடங்காக அதிகரிக்க திட்டம்!

இஸ்ரோ தலைவர் பேட்டி

சென்னை, நவ. 17- விண்வெளி ஆய்வில் உலக நாடு களுக்கு சவால் விடும் வகையில் செயல் பட்டு வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், அடுத்த மூன்று ஆண்டுகளில் அதன் வருடாந்திர விண் கலம் தயாரிப்பை மூன்று மடங்காக அதிகரிக்க திட்டமிட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரி வித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த  சிறப்பு பேட்டியில் அவர் கூறுகையில், “நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் மேலும் ஏழு ராக்கெட்டுகளை விண்ணில் ஏவ  இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் வணிக ரீதியான தகவல் தொடர்பு செயற் கைக்கோள் மற்றும் பல்வேறு பிஎஸ்எல்வி,  ஜிஎஸ்எல்வி திட்டங்களும் அடங்கும். முதல் முறையாக இந்திய தொழில்துறை யில் தயாரிக்கப்பட்ட பிஎஸ்எல்வி ராக்கெட்  ஏவும் திட்டமும் இதில் அடங்கும். சந்திரயான் 4 திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நிலவில் இருந்து  மாதிரியை எடுத்து பூமிக்கு திரும்பும்  வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது. இது இந்தியாவின் மிகவும் சிக்கலான நிலவு ஆய்வுத் திட்டமாக இருக்கும். இதை 2028 ஆம் ஆண்டு செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். ஜப்பான் விண்வெளி நிறுவனத்து டன் இணைந்து நிலவின் துருவத்தை ஆய்வு செய்யும் லூபெக்ஸ் திட்டம் மற் றொரு முக்கிய திட்டமாகும். விண்வெளி யில் இந்தியாவின் விண்வெளி நிலை யத்தை 2035 ஆம் ஆண்டுக்குள் நிறுவுவதற் கான பணிகளை இஸ்ரோ தொடங்கி யுள்ளது. இதற்கான முதல் ஐந்து தொகுதி கள் 2028 ஆம் ஆண்டுக்குள் விண்வெளி யில் நிலை நிறுத்தப்படும். விண்வெளிக்கு மனிதர்களை அனுப் பும் ககன்யான் திட்டத்தின் ஆளில்லாத விண்கலம் அனுப்பும் காலக்கெடு மட்டுமே மாற்றியமைக்கப்பட்டுள்ளது. விண்வெளி வீரர்களுடன் அனுப்பும்  விண்கலம் 2027-க்கு திட்டமிடப்பட்டு உள்ளது. நிலவுக்கு இந்திய விண்வெளி வீரர்களை அனுப்பி திருப்பி அழைத்து வரும் திட்டத்தை 2040 ஆம் ஆண்டுக் குள் செயல்படுத்த பிரதமர் மோடி அறி வுறுத்தியுள்ளார். சர்வதேச விண்வெளி  பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கை தற்போதைய இரண்டு சதவீதத் திலிருந்து 2030 ஆம் ஆண்டுக்குள் எட்டு  சதவீதமாக அதிகரிக்க இஸ்ரோ உழைத்து வருகிறது” என்றார்.