tamilnadu

கல்லூரி மாணவர்களுக்கு 20 லட்சம் மடிக்கணினிகள் வழங்க திட்டம்

கல்லூரி மாணவர்களுக்கு  20 லட்சம் மடிக்கணினிகள் வழங்க திட்டம்

சர்வதேச டெண்டர் அறிவிப்பு

சென்னை, மே 23 -  தமிழ்நாடு அரசின் 2025-2026 நிதியாண்டு நிதிநிலை அறிக்கையின்படி கல்லூரி மாண வர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம்  குறித்த உயர்நிலைக் குழுவின் ஆய்வுக் கூட்டம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்  தலைமையில் கடந்த மே 19 அன்று நடை பெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கம்  தென்னரசு, கோவி.செழியன், பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப்  யாதவ், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மைச் செய லாளர் பிரஜேந்திர நவ்நீத், உயர் கல்வித் துறை செயலாளர் சி.சமயமூர்த்தி, நிதித்துறை  செயலாளர் (செலவினம்) எஸ்.நாகராஜன், கல்லூரிக் கல்வி ஆணையர் எ.சுந்தரவல்லி, தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஜெ.இன்னசென்ட் திவ்யா உள்பட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். டெண்டர் விவரங்கள் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க தமிழ்நாடு அரசு ஒப்பந்த நிறுவ னங்களை நாடியுள்ளது. 20 லட்சம் மடிக் கணினிகளை கொள்முதல் செய்ய அரசின் எல்காட் நிறுவனம் சர்வதேச டெண்டரை அறி வித்துள்ளது. அடுத்த மாதம் 25 ஆம் தேதி  வரை டெண்டர் சமர்ப்பிப்பதற்கு கால அவ காசம் வழங்கப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்படும் லேப்டாப்பில் 8 ஜிபி ரேம், 256  ஜிபி எஸ்எஸ்டி ஹார்ட் டிஸ்க், 14 அல்லது  15.6 இஞ்ச் அளவில் டிஸ்பிளே இருக்க வேண்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம், அடுத்த கல்வியாண்டில் சேரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.