tamilnadu

img

2002 வாக்காளர் பட்டியலில் பெற்றோர் பெயர் இருந்தால் மட்டுமே புதிய வாக்காளர் பட்டியலில் இடம்

2002 வாக்காளர் பட்டியலில் பெற்றோர் பெயர்  இருந்தால் மட்டுமே புதிய வாக்காளர் பட்டியலில் இடம்

விருதுநகர், டிச.28 - 2002 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தாய், தந்தையரின் பெயர் கள் இடம்பெற்றிருந்தால் மட்டுமே புதிய  வாக்காளராக சேர்க்க முடியும் என்ற  புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால், ஏராளமானோர் தேர்த லில் வாக்களிக்க முடியாமல், அவர் களது வாக்குரிமையை இழக்கும் அபா யம் ஏற்பட்டுள்ளது. தமிழகமெங்கும் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகள் நிறைவடைந்து, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிச.19 ஆம் தேதி வெளி யிடப்பட்டது. ஆனால், இதில் பல்வேறு  குறைபாடுகள் இருப்பதாக பொது மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். எஸ்.ஐ.ஆர். படிவத்தை முறையாக  நிரப்பி வழங்கிய பலரது பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை. அதே நேரத்தில், இறந்த வர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், அனைத்து  ஆவணங்களையும் சரியாக சமர்ப்பித் தவர்களுக்கும் “விசாரணைக்கு ஆஜ ராக வேண்டும்” என தேர்தல் ஆணை யம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தக வல்கள் வெளியாகியுள்ளன. இதனால், தமிழக வாக்காளர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில், தமிழகமெங்கும் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளில் டிசம்பர் 27, 28 மற்றும் 2026 ஜனவரி  3, 4 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் கள் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இம்முகாம்களில் புதிய  வாக்காளர் சேர்ப்பு, முகவரி மாற்றம்,  பெயர் திருத்தம், பெயர் நீக்கம்  உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப் படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், புதிய வாக்காளராக சேருவதற்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வரு கிறது. குறிப்பாக, படிவம் 6 மூலம்  விண்ணப்பிக்கும் புதிய வாக்காளர் களிடம், 2002 ஆம் ஆண்டு வாக்காளர்  பட்டியலில் அவர்களது பெற்றோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதற்கான விவரங்கள் கேட்கப்படுவதாக கூறப் படுகிறது. இதுகுறித்து விருதுநகரைச் சேர்ந்த சேகரபாண்டியன் என்பவர் கூறுகையில், “எனது தாய், தந்தையர் மதுரை மாவட்டத்தில் வசித்து வந்த னர். இருவரும் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டனர். அவர்கள் எந்த முகவரியில் இருந்தனர் என்பதே நினைவில் இல்லை. நான் ஏற்கனவே விருதுநகரில் ஒரு பகுதியில் வசித்து வந்தேன். தற்போது வேறு பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளேன். இந்நிலையில் எனது வாக்கை நீக்கி விட்டனர். ஆதார், குடும்ப அட்டைகளை தற்போ தைய முகவரிக்கு மாற்றி, வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கச் சென்றபோது, தாய், தந்தையரின் பழைய வாக்காளர் பட்டியல் விவ ரங்களை கேட்கிறார்கள். இதனால் வீண் அலைச்சலும், கடும் மன உளைச் சலும் ஏற்பட்டுள்ளது. இத்தகைய விதி முறையை ஏன் முன்கூட்டியே தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை?” என்றார். எனவே, மாநில தேர்தல் ஆணை யம் புதிய வாக்காளர்களிடம் 2002 வாக்காளர் பட்டியலில் பெற்றோரின் விவரங்களை கேட்பதை கைவிட வேண்டும் என்றும், சரியான முகவரி யில் உரிய ஆவணங்களுடன் விண்ணப் பிக்கும் அனைவருக்கும் வாக்குரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.          (ந.நி)