சீர்காழியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம், புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக, அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை கல்லூரி மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். இப்புகைப்பட கண்காட்சியில், தமிழக முதல்வரால் துவக்கி வைத்த புதிய திட்டங்கள் மற்றும் அரசு நலதிட்ட உதவிகள் வழங்கியது குறித்த புகைப்படங்கள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், தமிழக அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்களான, மக்களைத் தேடி மருத்துவம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம், இன்னுயிர் காப்போம் திட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் புகைப்படங்கள், மேலும், சுற்றுச்சூழல் காலநிலைமாற்றத்துத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் பிற துறை அமைச்சர் பெருமக்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.