மக்களின் வித்தியாசமான அஞ்சலி...
அக்டோபர் 30, 2025. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர்களில் ஒருவரான சாமிநேனி ராமாராவ் அவரது சொந்த கிராமமான பதர்லபாடுவில் சமூக விரோதிககளால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். தற்போது நடைபெற்ற தெலங்கானா உள்ளாட்சித் தேர்தலில் அந்த கிராமப் பஞ்சாயத்தில் உள்ள 12 வார்டுகளில் 11 வார்டுகளில் மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். பஞ்சாயத்து தலைவராகவும் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். தியாகச் சுடரை ஏற்றிப்பிடித்துள்ளனர் பதர்லபாடு மக்கள்.
