tamilnadu

img

சிபிஎம் வேட்பாளருக்கு ஆதரவாக அணி திரண்ட மக்கள் அசாம் ஐக்கிய முன்னணிக்கு பெருகும் ஆதரவு

சிபிஎம் வேட்பாளருக்கு ஆதரவாக அணி திரண்ட மக்கள் அசாம் ஐக்கிய முன்னணிக்கு பெருகும் ஆதரவு

கவுகாத்தி, மார்ச் 27 - அசாம் சட்டமன்றத் தேர்தலில்  பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அசாம் ஐக்கிய முன்னணி (அசோம் சன்மிலிதோ மோர்ச்சா) என்ற பெயரில் அணி திரண்டுள்ளன.  காங்கிரஸ் தலைமையிலான இந்த கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் (மார்க்சிஸ்ட் - லெனி னிஸ்ட்) விடுதலை, ராய்ஜோர் தளம், அசாம் தேசிய பரிஷத், அசாம் அனைத்துக் கட்சி மலைவாழ் மக்கள் தலைவர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல கட்சிகள் இடம் பெற்றுள்ளன.  இந்நிலையில், புதனன்று அசாமின் பவானிபூர் - சோர்பாக் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரான மனோரஞ்சன் தாலுக்தாருக்கு ஆதரவாக பவானி பூரில் பிரம்மாண்ட பிரச்சாரப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவைத் துணைத் தலைவருமான கவுரவ் கோகோய் (அசாம் காங்கிரஸ் தலைவர்) தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக் கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சுப்ரகாஷ் தாலுக்தார், அசாம் தேசிய பரிஷத் தலைவர் லூரின்ஜோதி கோகோய், வேட் பாளர் மனோரஞ்சன் தாலுக்தார், ராய்ஜோர் தளம் கட்சியின் தலை வர் அகில் கோகோய் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.  பிரச்சார உரைக்குப் பின்பு, “அசாமின் அடையாளத்தையும் ஜனநாயகத்தையும் காப்போம்” என தலைவர்கள் முழங்க பொதுக் கூட்டத்தில் இருந்த ஆயிரக்கணக் கானோரும், பதிலுக்கு முழக்க மிட்டனர்.  இதனால் பவானிப்பூர் பொது மைதானம் அதிர்ந்தது.