tamilnadu

img

மதுரை மக்களிடம் பதற்றமில்லை ஆர்.பி.உதயகுமார் பேட்டி

மதுரை:
கொரோனா தொற்று பற்றி மதுரை மக்கள் பதற்றமடையாமல் சகஜநிலையில் உள்ளனர் என வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரை பரவை காய்கறி மார்க்கெட் மாற்றுவதற்கான இடம் தேர்வு செய்வது தொடர்பாக பெருங்குடி அருகில் உள்ள தனியார் கல்லூரி மைதானம் மற்றும் கப்பலூர் துணைக்கோள் நகரம் ஆகிய இடங்களில் வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும்தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வுசெய்தார்.பின்னர் அவர் கூறியதாவது:தென் தமிழகத்திற்கு காய்கறி செல்லக்கூடிய மிகபெரிய மார்க் கெட்டாக இருக்கக்கூடிய பரவை மார்க்கெட் கடந்த இருபது நாட்க
ளாக மூடப்பட்டுள்ளது. பரவை மார்க்கெட் சங்கத்தைச் சேர்ந்தவர்களை அழைத்து நான்கு, ஐந்து இடங் களை தேர்வு செய்ய ஆய்வு செய்யப்படுகிறது. அதில் குறிப்பாக நாகரெத்தினம் அங்காளம்மன் கல்லூரி விளையாட்டு மைதானம், துணைக் கோள் நகரத்தில் இருக்கக்கூடிய பகுதி, வாடிப்பட்டி பகுதி என பல இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு விரைவில் முடிவு எடுக்கப்படும். வியாபாரிகள் சங்கத்தின் ஒத்துழைப்போடு அவர்கள் எதை விரும்புகிறார்களோ அதை மாவட்ட நிர்வாகம் அனைவருக்கும் ஏற்றவகையில் பாதுகாப்பாக இருக்கிறதா என பார்த்து சமூகஇடைவெளியோடு வியாபாரம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

மதுரை மக்கள் பதற்றம் இல்லாமல் நோய்த்தொற்றை எதிர்ப்பதற்குதங்களை தயார்படுத்திக் கொண்டு வருகிறார்கள். உச்சப்பட்சமாக எவ்வளவு பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யமுடியுமோ அவ்வளவு பேருக்கு வீடுவீடாக சென்று பரிசோதனை செய்யப்படுகிறது. செவ்வாயன்று 5,100 பேருக்கும், புதன்கிழமை 4,300 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை செய்வதில் மதுரை மாவட்டம் பிற மாவட்டங்களுக்கு முன்மாதிரியாக செயல்படுகிறது. மதுரை மாவட்டத்தில் பாதுகாப்பாக இருக்கிறோம்என்று மக்கள் உணர்ந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் செய்துள்ள ஏற் பாட்டால் மதுரை மக்கள்  பதற்றம் இல்லாமல் சகஜ நிலையிலே அன்றாடப் பணிகளை செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.