42 பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதிய ஆணை!
சென்னை, டிச. 10 - பத்திரிகைத் துறையிலிருந்து ஓய்வு பெற்று நலிந்த நிலையில் உள்ள 42 பத்திரிகையாளர்களுக்கு தலா 12,000 ரூபாய் மாதாந்திர ஓய்வூதியத்திற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தீக்கதிர் நாளிதழின் துணை ஆசிரியராக பணியாற்றிய தி.வீராச் சாமி உள்ளிட்ட 10 பேருக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் புதனன்று நடந்த நிகழ்வில், முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரடியாக ஓய்வூதிய ஆணை களை வழங்கினார். பத்திரிகையாளர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கடந்த 27.11.2025 அன்று அரசாணை வெளியிடப்பட்டதை அடுத்து இந்த ஆணை கள் வழங்கப்பட்டுள்ளன. மே 2021 முதல் இதுவரை 16 பத்திரிகையாளர்களுக்கு 30 லட்சத்து 61 ஆயிரத்து 339 ரூபாய் மருத்துவ உதவி நிதி வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
