மும்பையில் 2.25 லட்சம் போலி வாக்காளர்கள் ; 11 லட்சத்திற்கும் அதிகமான இரட்டைப் பதிவுகள்
மும்பை நாட்டில் வாக்குத் திரு ட்டு பெரும் பிரச்ச னையாக உருவெ டுத்துள்ளது. உண்மையான வாக்காளர்கள் நீக்கம், போலி வாக்காளர்கள் மூலம் பாஜக மத்தியிலும், மாநிலங்களிலும் அதிகாரத்தில் நீடித்து வருவ தாக ஆதாரங்களுடன் தொ டர்ச்சியாக செய்திகள் வெளி யாகி வருகின்றன. இந்நிலையில், மும்பை மாநகராட்சியில் 2.25 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க் கப்பட்டுள்ளது அம்பலமாகி யுள்ளது. நாட்டின் மிகப் பெரிய பெரு நகரங்களில் (மெட்ரோ சிட்டி) ஒன்றான மும்பையில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடை பெற உள்ளது. இந்த தேர்த லை முன்னிட்டு அம்மாநில தேர்தல் ஆணையத்தால் (SEC) வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டிய லில் 11 லட்சத்திற்கும் அதிக மான இரட்டைப் பதிவுகள் (ஒரே நபருக்கு 2/3 வாக்குகள் - Duplicate/Triplicate Entries) கண்டறியப் பட்டுள்ளது. மொத்தம் 1.03 கோடி வாக்காளர்கள் உள்ள மும்பையில், ஏறக்குறைய 10இல் ஒரு வாக்காளரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை இடம்பெற்றுள்ளது. இது வாக்காளர் பட்டியலின் துல்லியத்தன்மை குறித்து தீவிரமான கவலைகளை எழுப்பியுள்ளது. அதிகபட்சமாக மேற்கு புறநகர்ப் பகுதிகளில் 4.98 லட்சமும், கிழக்கு புறநகர்ப் பகுதிகளில் 3.29 லட்சமும், தீவு நகரத்தில் (Island City) 2.73 லட்சமும் இரட்டை வாக்காளர்கள் உள்ளனர். குறிப்பாக மும்பையில் 11 லட்சம் இரட்டை வாக்கா ளர் பதிவுகளில், இதுவரை 2.25 லட்சம் வாக்காளர்க ளின் பதிவுகள் போலியான வை என்றும் ஆதாரத்துடன் செய்திகள் வெளியாகி யுள்ளன. இதனால் வாக்காளர் பட்டியல் முழுமையாகச் சரி செய்யப்படும் வரை தேர்த லை நடத்தக் கூடாது என்று மகாராஷ்டிரா விகாஸ் அகாடி (மகாராஷ்டிரா மாநில “இந்தியா” கூட்டணி) மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா உள்ளிட்ட எதிர்க்கட்சி கள் கோரிக்கை விடுத்துள் ளன.
