states

img

ஆந்திராவில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 9 பேர் பலி!

ஆந்திராவில் இன்று அதிகாலை நடந்த கொடூரமான பேருந்து விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
ஆந்திரப்பிரதேச மாநிலம் சீதாராமராஜு மாவட்டத்தில் சிந்தூர் - மாரேடுமில்லி மலைப்பாதையில் 37 பேருடன் ஆன்மீக சுற்றுலா சென்ற பேருந்து அதிகாலையில் சென்றுகொண்டிருந்தது.
அதிகாலை 4 மணியளவில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மலையிலிருந்து பள்ளத்தில் கவிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் மூடுபனி காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கொடூர விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம்மூம், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்குவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.