திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் உள்ள வழக்கின் விசாரணை டிச.15ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கின் விசாரணை இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் நடைபெற்றது. இந்த வழக்கின் விசாரணையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூண் தீபத் தூண் அல்ல, இந்த விவகாரத்தில் தனி நீதிபதி தனது அதிகார வரம்பை மீறி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முழுக்க முழுக்க மனுதாரருக்குச் சாதகமான விபரங்களை மட்டுமே தனி நீதிபதி கருத்தில் கொண்டுள்ளார்.திருப்பரங்குன்றம் கோயில் 2000 ஆண்டுகள் பழமையானது. திடீரென இந்த தூண் எங்கிருந்து வந்தது?
வழக்கில் உரிய வாதப் பிரதிவாதங்களைக் கேட்காமலேயே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பல நூறு ஆண்டுகளாக மலை உச்சியில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் மேலேதான் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. தர்கா அருகில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றியதற்கான எந்த ஆதாரமும் இல்லை. என கோயில் நிர்வாகம் தரப்பு வாதத்தை முன்வைத்தது
விசாரணை முடிவில் தீபம் ஏற்றுவதில் பிரச்சனை இல்லை எங்கே ஏற்றுவது, வேறு இடத்திற்கு மாற்றலாமா என்பதுதான் பிரச்சனை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இடைக்கால உத்தரவு பிறப்பிக்க இயலாது எனக்கூறி வழக்கை டிச.15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டதோடு மீதமுள்ள மனுதாரர்கள் தங்கள் வாதங்களை திங்கட்கிழமை முன்வைக்கலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
