திருபரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமைச் செயலாளர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று நடைபெற்றது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார்.
இந்த விசாரணையின்போது கோயிலில் தீபம் ஏற்றுவது தொடர்பாக கோயில் நிர்வாகம்தான் முடிவு எடுக்க வேண்டுமே தவிர நீதிமன்றம் முடிவெடுக்கக்கூடாது என தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது.
அதற்கு திருப்பரங்குன்றம் விவகாரம் தீபம் ஏற்றும் வழக்கு மட்டும் அல்ல, சொத்துரிமை சார்ந்த வழக்கும்தான் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பதில் கருத்து தெரிவித்தார்.
விசாரணை முடிவில் டிச.17ஆம் தேதி தலைமைச் செயலாளர் மற்றும் சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆகியோர் ஆஜராக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.
