tamilnadu

img

காடந்தேத்தியில் சிபிஎம் சாலைமறியல் போராட்டம்

காடந்தேத்தியில் சிபிஎம் சாலைமறியல் போராட்டம்

நாகப்பட்டினம், டிச.11-  நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு அருகே, காடந்தேத்தி ஊராட்சி முழுவதும் ஜல் ஜீவன் திட்ட வேலைகள் மூலம் குடிநீர் வழங்க வேண்டும் எனவும், சேதமடைந்துள்ள சாலையை சரி செய்து புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மாவட்ட செயலாளர் வி.மாரிமுத்து தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்டோர், சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.  அப்போது, துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீண்டாமை ஒழிப்பு முன்னனி மாவட்டச் செயலாளர் ராஜா, மாவட்ட குழு உறுப்பினர் வேணு, ஒன்றியக்குழு உறுப்பினர் தங்கதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.