tamilnadu

img

கீரனூர் ஊராட்சிக்கு அடிப்படை வசதிகோரி சிபிஎம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கீரனூர் ஊராட்சிக்கு அடிப்படை வசதிகோரி  சிபிஎம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், டிச.11-  தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியம் கீரனூர் ஊராட்சி மக்களின் அடிப்படை வசதிகோரி ஆரியச்சேரி கிராம வருவாய் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது  ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர்கள் எஸ். மணிவேல், டி. ரஞ்சித் தலைமை வகித்தனர் கே.நாகையன், எஸ். தருமையன், தங்கராசு, சரபோஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கையை விளக்கி மாவட்டக் குழு உறுப்பினர் எஸ். பழனிவேல், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் ஆனந்தன், வாலிபர் சங்க பொறுப்பாளர்கள் பிரேமநாத், வெங்கடேஷ் மற்றும் மாதர் சங்கத்தினர் பேசினர்.  நூறு நாள் வேலைக்கு சட்டகூலி ரூ.336-ஐ முழுமையாக வழங்கிட வேண்டும். கீரனூர் கிராம் மக்களுக்கு கிளை அங்காடி அமைத்திட வேண்டும். கீரனூர், ஆரியச்சேரி, பருத்தி சேரி , மக்கள் பயன் பெறும் வகையில் குடவாசல் செல்லும் குடமுருட்டி ஆற்றுப் பாலம் பணியினை அரசு உடனடியாக துவங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.