புதிய நகரப் பேருந்து இயக்க தொடக்க நிகழ்ச்சி
பாபநாசம், டிச.11- பாபநாசத்தில் புதிய நகரப் பேருந்து இயக்க தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பகோணத்திலிருந்து பாபநாசம், அய்யம்பேட்டை, கண்டியூர் வழியாக திருவையாறு செல்லும் புதிய நகரப் பேருந்து இயக்கத்தை கும்பகோணம் எம்.எல்.ஏ அன்பழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பாபநாசம் பேரூராட்சித் தலைவி பூங்குழலி, செயல் அலுவலர் குமரேசன், சுகாதார ஆய்வாளர் பரமசிவம், கவுன்சிலர்கள், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் மண்டலத் துணை மேலாளர் தங்கபாண்டியன், கும்பகோணம் கிளை மேலாளர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
