states

img

5 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 10,950 தொழில் நிறுவனங்கள் மூடல் தள்ளாடும் “மோடியின் குஜராத் மாடல்”

5 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும்  10,950 தொழில் நிறுவனங்கள் மூடல் தள்ளாடும் “மோடியின் குஜராத் மாடல்”

அகமதாபாத் பிரதமர் மோடி முதலமைச்ச ராக இருந்த குஜராத் மாநி லத்தில் பாஜக நீண்ட காலம் ஆட்சி செய்து வருகிறது. தற்போது மோடிக்கு நெருக்கமான பூபேந்திர படேல் முதலமைச்சராக உள்ளார். இந்நிலையில், குஜராத் பாஜக அரசின் மோசமான தொழிற் கொள்கையில் உள்ள தெளிவற்ற நிலைகள் மற்றும் குறைபாடுகள் காரணமாக, கடந்த 5 ஆண்டுக ளில் மாநிலத்தில் உள்ள 10,950 சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) மூடப் பட்டுள்ளன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனை குஜராத் சட்டமன்றத்தில் அம் மாநில அரசே ஒப்புக்கொண்டுள் ளது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு தொழில்துறை அமைச்சர் பல்வந்த் சிங் அளித்த எழுத்துப் பூர்வ பதி லில், “கடந்த 5 ஆண்டுகளில் (2018 முதல் 2023 வரை) குஜராத்தில் மொத்தமாக 10,950 சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறு வனங்கள் மூடப்பட்டுள்ளன. 2018-2019 இல் 2,752 நிறுவனங்களும், 2019-2020இல் 2,873 நிறுவனங்க ளும்,  2020-2021இல் 2,367 நிறுவ னங்களும், 2021-2022இல் 1,749 நிறு வனங்களும்,  2022-2023இல் 1,209 நிறுவனங்கள் என மொத்தம் 10,950 தொழில் நிறுவனங்கள் மூடப்பட் டுள்ளன” என அதில் கூறப் பட்டுள்ளது.  பாஜகவின் தொழிற் கொள்கையின் விளைவு 5 ஆண்டுகளில் 10,950 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டது சாதா ரண விஷயம் அல்ல. தொழில் நிறு வனங்கள் மூடலுக்கு முக்கியக் கார ணங்களாக, கடன் சுமை அதிகரிப்பு மற்றும் அதைத் திருப்பிச் செலுத்த முடியாதது ஆகியவையே கூறப் படுகின்றன. தொழில் நிறுவனங்கள் மூடப் பட்டதால் குஜராத்தில் பல்லாயி ரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும், இந்த நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட பெருமளவு மூல தனமும் முடங்கியுள்ளது. குஜராத் பாஜக அரசாங்கம் நன்கொடைக்காக கார்ப்பரேட் தொழில்களுக்கு அளிக்கும் முக்கி யத்துவம், சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட வில்லை. இதனால் தான் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவ னங்கள் துறை பின்னடைவுக்குக் காரணம். அதே போல சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அமல்படுத்தியதன் தாக்கம், போதிய அரசு ஆதரவின்மை, சந்தைப் போட்டி மற்றும் கடன் பெறுவதில் உள்ள சிக்கல்கள் ஆகி யவை சிறு தொழில்களின் நெருக்க டியை மேலும் அதிகரித்துள்ளன என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பாஜக அரசு மழுப்பல் தொழில் துறைக்கு உதவுவ தற்காகப் பல்வேறு கடன் மானியத் திட்டங்கள் மற்றும் மூலதன ஊக்க உதவிகள் வழங்கப்பட்டதாக குஜ ராத் பாஜக அரசு கூறினாலும், இந்த நிறுவனங்கள் மூடப்பட்ட தற்குக் குறிப்பிட்ட காரணங்களை அரசு தரப்பு தெளிவாக விளக்க வில்லை. எனினும் தொழிற்கொள் கையை முழுமையாக மறுசீர மைக்க வேண்டியதன் அவசி யத்தை இப்புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.