சென்னை மக்களுக்கான நில உரிமைப் போராட்டம்! டிச. 16 - லட்சம் பேர் மனு அளிக்கும் இயக்கம்
சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பேட்டி
சென்னை, டிச. 11 - பல்வேறு வாழ்விடக் கோரிக்கைகளை வலியுறுத்தி, டிசம்பர் 16 அன்று ஒரு லட்சம் பேர் முதலமைச்சரிடம் மனு அளிக்கும் இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்த உள்ளதாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்தார். சென்னையில் வியாழனன்று செய்தி யாளர்களைச் சந்தித்த அவர், சென்னை யின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய உழைப்பாளி மக்களுக்கு அவர்கள் வசிக்கும் நிலங்களை உரிமையாக்கியும், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு களுக்குக் கிரயப் பத்திரம் வழங்கியும் வாழ்விடப் பிரச்சனைகளுக்குத் தமிழக அரசு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார். குடிமனைப் பட்டா மற்றும் கிரயப் பத்திரம் தொடர்ந்து அவர் பேசுகையில், சென்னையின் வளர்ச்சிக்கு உழைத்த மக்கள் பல்வேறு காரணங்களைக் கூறி இப்போது அப்புறப்படுத்தப்பட்டு, நிர்க்கதியாய் நிற்கும் நிலை ஏற்பட்டுள் ளது. எனவே, சென்னை மற்றும் புற நகர்ப் பகுதிகளில் எந்த வகையான புறம்போக்கு நிலங்களில் வசித்தாலும், அவர்களுக்கு வகை மாற்றம் செய்து குடிமனைப் பட்டா வழங்க வேண்டும். அதேபோல், குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டி வழங்கப்பட்டவர்களுக்கு இன்னமும் கிரயப் பத்திரம் வழங்கப்படாமல் உள்ளது.
இவை அனைத்தையும் உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். நீர்நிலைப் புறம்போக்கை வகைமாற்ற வேண்டும் அரசு ஆவணங்களில் நீர்நிலை என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதன் பின்பு பல்வேறு நீர்நிலைப் புறம்போக்கு நிலங்களில் அரசே அடுக்குமாடிக் குடியிருப்புகள், அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், நினைவிடங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட போதெல்லாம், புதிய கட்டமைப்பு வசதி களை உருவாக்கப் பெரிய ஏரிகளையே அரசு பயன்படுத்தியுள்ளது. அரசே தன்னுடைய தேவைகளுக்காக நிலங்களை வகை மாற்றம் செய்து பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது, சாதாரண ஏழை மக்கள் அமைத்துள்ள சிறிய வீடுகளை நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி, மாற்று இடமும் வழங்கா மல் அப்புறப்படுத்துவது எந்த வகையில் நியாயம்? என்று பெ. சண்முகம் கேள்வி எழுப்பினார்.
‘பெல்ட் ஏரியா’ பட்டா மற்றும் தரிசு நிலங்கள் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ‘பெல்ட் ஏரியா’ என்ற பெயரில் 60 ஆண்டு களுக்கும் மேலாகப் பட்டா வழங்கப் படாமல் இருந்தது. 2024ஆம் ஆண்டு திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, பெல்ட் ஏரியாக்களில் பட்டா வழங்கலாம் என்று அரசாணை வெளியிட்டது வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டில் சுமார் 70 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் உள்ளது. இந்தச் சூழ்நிலை யில், ஒரு குடும்பத்திற்கு 3 சென்ட் நிலம் வழங்குவதில் எந்தச் சிக்கலும் இல்லை. எனவே, அதற்கான அரசாணையை அரசு வெளியிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மின் இணைப்பு மறுப்பு இடநெருக்கடியால் அவதி உச்சநீதிமன்ற உத்தரவின்படி, எந்த வகையான புறம்போக்கு நிலமாக இருந்தாலும், மின்சாரம் என்பது அடிப்படை உரிமை என்ற அடிப்படையில் அனைத்துக் குடியிருப்புகளுக்கும் மின்இணைப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால், நீர்நிலைகளைக் காரணம் காட்டி இன்றும் மின் இணைப்பு வழங்க மறுக்கப்படுகிறது. ‘ஸ்மார்ட் சிட்டி’ என்ற பெயரில் மறு குடிய மர்த்தப்பட்டவர்களுக்கு 120 சதுர அடியில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு குடும்பம் வாழப் போதுமான இடவசதி இல்லை. எனவே, மறு குடியமர்த்தப்பட்ட அனைவருக்கும் தேவையான இடவசதியுடன் வீடுகள் கட்டிக் கொடுக்க அரசு சிறப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டும் என வும் பெ.சண்முகம் வலியுறுத்தினார்.
அரசாணை 318-ஐ செயல்படுத்த வேண்டும் கோவில், தேவாலயங்கள், வக்பு வாரி யத்திற்குச் சொந்தமான இடங்களில் பல தலை முறைகளாக வசித்துவரும் மக்களுக்குச் சாதக மாக அரசுச் செயல்பட வேண்டும். இந்து சமய அறநிலையத் துறை, அதிக வரி, அபராதம் விதிப்பது, வெளியேற்றுவது போன்ற நடவடிக்கை களைக் கைவிட வேண்டும். தரை வாடகை மட்டுமே வசூலிக்க வேண்டும். அரசாணை 318 மூலம் கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு நிலத்தை சொந்தமாக்க எடுக்கப்பட்ட முயற்சி, சில மதவெறி கும்பலால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு கிடப்பில் உள்ளது. மக்களுக்கு நல்லது செய்ய அரசு எடுக்கும் முயற்சிகளை இந்தச் சக்திகள் தடுக்கின்றன. இந்த அரசாணையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றார். டிசம்பர் 16 அன்று மாபெரும் இயக்கம் இந்த வாழ்விடப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தி, வரும் டிசம்பர் 16ஆம் தேதி ஒரு லட்சம் மக்களைத் திரட்டி, மனு அளிக்கும் இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்த உள்ளது. இறுதியில் தமிழக முத லமைச்சரைச் சந்தித்து, பட்டா கேட்கும் அனைத்துக் குடும்பங்களுக்கும் பட்டா வழங்கு வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலி யுறுத்துவோம் என்றார். பின்னர், செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த அவர் , ஆட்சி நிறைவடையும் தருவா யில் இப்போது கோரிக்கை வைக்கவில்லை.
குடி மனைப் பிரச்சனைக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. தற்போது இந்தப் பிரச்சனைகளை ஒன்றிணைத்து பெரிய இயக்கமாக நடத்துகிறோம் என்றார். தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் உட்பட அரசு நிலங்களை ஆக்கிரமித்துள்ள அனைத்துக் கல்வி நிலையங்கள், தொழிற்சாலைகளிட மிருந்தும் நிலங்களை மீட்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்துவோம். அதேநேரம், ஏழை மக்களுக்கு எதிரான அப்புறப்படுத்தும் நடவடிக்கையை எதிர்க்கிறோம் என்றார். அரசு விதிமுறைகளை மீறி கனிமவளக் கொள்ளை மட்டுமல்ல, எந்தக் கொள்ளை நடந்தாலும் தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுத்துத் தடுக்க வேண்டும் எனவும் பெ.சண்முகம் வலியுறுத்தி னார். அப்போது, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி, வடசென்னை மாவட்டச் செயலாளர் எம். ராமகிருஷ்ணன், தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முரு கன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா ஆகியோர் உடன் இருந்தனர். (ந.நி)
