tamilnadu

img

பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம் : முதல்வர்!

பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு  சேர்ப்போம் : முதல்வர்!

சென்னை, டிச. 11 - மகாகவி பாரதியாரின் 144-ஆவது பிறந்த நாளையொட்டி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  அதில், “சிந்தனை, சொல், செயல் என அனைத்திலும் புதுமையைப் புகுத்திய பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம்” என்று ‘எக்ஸ்’ தளத்தில் குறிப்பிட்டுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்ததும், பாரதி மறைவெய்திய நூற்றாண்டினையொட்டி 14 சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டு செயல்படுத்தி வருவதாகவும், பெண்களின் உயர்கல்விக்கான திட்டத்திற்கு பாரதியின்  கவிதையிலிருந்து புதுமைப்பெண் எனப் பெயரிட்டதாக வும் முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், பாரதியாரின் நினைவுநாளை ‘மகாகவி நாள்’ என அறிவித்ததையும் முதலமைச்சர் நினைவு கூர்ந்துள்ளார். இந்நிலையில், மெரினா கடற்கரையில் உள்ள பாரதியார் சிலைக்கு, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், இந்து சமயம் மற்றும் அறநிலை யத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.