tamilnadu

img

தனியார்மயமாக்கலின் விளைவே விமானப் போக்குவரத்து நெருக்கடி! ஏ.ஏ. ரஹீம் எம்.பி. குற்றச்சாட்டு

தனியார்மயமாக்கலின் விளைவே விமானப் போக்குவரத்து நெருக்கடி! ஏ.ஏ. ரஹீம் எம்.பி. குற்றச்சாட்டு

புதுதில்லி, டிச. 11 - ஒன்றிய அரசின் அலட்சியத் தாலும், தனியார்மயமாக்கலின் விளைவுகளினாலுமே தற்போதைய விமானப் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.ஏ.ரஹீம் நாடாளு மன்றத்தில் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக அவர் மேலும் பேசியிருப்பதாவது: “விமானப் போக்குவரத்து நெருக்கடி ஒன்றிய அரசின் நவீன  தாராளமயக் கொள்கைகள் மற்றும் தனியார்மயமாக்கலின் ஒரு துணை விளைபொருளாகும். இந்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறையில், ‘இண்டிகோ’ 65.6 சத விகிதத்தையும், ‘ஏர் இந்தியா’ 25.7 சதவிகிதத்தையும் கையாள்கிறது. அதாவது, இந்த இரண்டு நிறுவனங் களும் இந்திய விமானப் போக்கு வரத்துத் துறையில் 90 சதவிகி தத்தைக் கையாள்கின் றன.  ‘ஏர் இந்தியா’ தனியார்மயமாக்கப்பட்ட போது, ஒன்றிய அரசு அற்புதங் களைச் செய்வ தாகக் கூறியது. ஆனால் உண்மை என்ன வென்றால், பாதுகாப்பு, சேவை மற்றும் வசதிகளின் அடிப்படையில் எல்லாம் மிகவும் மோசமாக உள்ளது. இண்டிகோ நெருக்கடியின் போது, பயணிகளைக் கொள்ளையடிக்கும் அணுகுமுறையை ‘ஏர் இந்தியா’ எடுத்து வருகிறது.  கடந்த வாரம், டிக்கெட் விலை யில் கட்டுப்பாடுகளை விதித்துள் ளதாக ஒன்றிய அரசு கூறியிருந்தது. ஆனால் தற்போதைய நிலைமை என்னவென்றால், தில்லியில் இருந்து திருவனந்தபுரம் வரையிலான எகா னமி வகுப்பிற்கான கட்டணம் ரூ.64,000 வரை உள்ளது. அரசாங்கம் எந்த வகையான ஒழுங்குமுறை பற்றிப் பேசுகிறது? இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் அர சாங்கத்திற்கு எந்த ஒழுங்குமுறையும் இல்லை. மிகக் குறைந்த ஊழியர்களைக் கொண்டு அதிக வேலை வாங்கும் கொள்கைகளை நிறுவனங்கள் தொடர்கின்றன. இது பயணிகளின் பாதுகாப்பை கடுமையாகப் பாதிக்கிறது. நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல விமானப் பயண நேரக் கட்டுப்பாடுகளையும் அர சாங்கம் தளர்த்தியுள்ளது. அரசாங்கம் இந்த முடிவைத் திரும்பப் பெற வேண்டும்.  விமானப் போக்குவரத்துத் துறையில் இரட்டைக் கொள்கையை முடிவுக்குக் கொண்டு வந்து, விமானக் கட்டணங்களைக் கட்டுப்  படுத்தவும், பயணிகளின் பாது காப்பை உறுதி செய்யவும் வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.” இவ்வாறு ஏ.ஏ.ரஹீம் எம்.பி. நாடாளுமன்றத்தில் வலி யுறுத்தினார்.