tamilnadu

img

முன்னாள் எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதியம் உயர்வு

முன்னாள் எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதியம் உயர்வு

சென்னை, ஏப்.26 - தமிழக முன்னாள்  எம்எல்ஏக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியம் உயர்த்தப்படுவதாக பேரவையில் முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் அறி வித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் சனிக்கிழமை (ஏப்.26)  சட்டமன்றம், ஆளுநர், ஓய்வூதியங்கள் ஏனைய ஓய்வுக் கால நன்மைகளும் ஆகிய மானியக் கோரிக்கைகள் மீது  விவாதம் நடைபெற்றது. அப்போது குறுக்கிட்டு  பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சட்டப்பேரவை மற்றும் மேலவையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு மாத  ஓய்வூதியம் ரூ. 30 ஆயிரத்திலிருந்து ரூ.35 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும், சட்டப்பேரவை மற்றும் மேல வையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு குடும்ப ஓய்வூதி யம் மாதம் ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.17,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் கூறினார். மருத்துவப் படியும் உயர்வு மேலும், ஆண்டு ஒன்றுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவப்படி ரூ.75 ஆயிரம் என்பது ரூ. 1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். ஏற்கனவே இந்த ஆண்டின் மருத்துவப் படி வழங்கப்பட்ட நிலையில் மீதமுள்ள ரூ. 25 ஆயிரம்  என்ற விதிகள் திருத்தம் செய்யப்பட்ட பிறகு வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.