tamilnadu

img

வாய்ப்பு வாசல்

இஸ்ரோவில் விஞ்ஞானிகள் தேவை

பெரும் சாதனைகளைப் படைத்து வரும் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ(ISRO)வில் பொறியியல் பட்டம் படித்து விஞ்ஞானிகளாகப் பணிபுரிவதற்கான பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. 63 இடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வந்திருக்கிறது. பணியிடத்தின் பெயர் - விஞ்ஞானி/பொறியாளர்  சம்பளம் - மாதம் ரூ. 56,100  வயது வரம்பு - 28 வயதுக்குள் இருக்க வேண்டும். பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள், முன்னாள்  ராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோ ருக்கு ஒன்றிய அரசின் விதிகளின்படி தளர்ச்சி உண்டு. கல்வித்தகுதி - பொறியியல் பட்டப்படிப்பில் எலக்ட்ரானிஸ்/தகவல் தொடர்பு, மெக்கானிக்கல் மற்றும் கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளில் குறைந்தபட்சம் 65 விழுக்காடு மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமாகும். GATE 2024-25 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். தொழில்நுட்ப அறிவு, பொது அறிவு, தகவல் தொடர்புத்திறன் உள்ளிட்டவற்றை சோதிக்கும் வகையில் வினாக்கள் எழுப்பப்படும். இந்தத் தேர்வு தொடர்பான விபரங்கள் மின்னஞ்சல் வாயிலாகத் தெரிவிக்கப்படும். இந்த அறிவிக்கை தொடர்பான முழு விபரங்கள் மற்றும் விண்ணப்பிப்பதற்கான இணைப்பு ஆகியவற்றைப் பெற www.isro.gov.in என்ற முகவரியை நாடலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி மே 19, 2025 ஆகும்.

விவசாயக் கல்லூரிகளில் பேராசிரியர்கள்

ஒன்றிய அரசின் விவசாயத் துறையின்கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கும் விவசாயக் கல்லூரிகள் மற்றும் விவசாய ஆய்வு மையங்களில் உதவிப் பேராசிரியர், மூத்த தொழில்நுட்ப அலுவலர் மற்றும் விவசாய ஆய்வு விஞ்ஞானி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புகிறார்கள். மூன்று பணியிடங்களிலும் மொத்தம் 582 இடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகியிருக்கிறது. வயது வரம்பு - உதவிப் பேராசிரியர் மற்றும் மூத்த தொழில்நுட்ப அலுவலர் ஆகிய இரண்டு பணியிடங்களுக்கும் 21 வயது முதல் 35 வயது வரையில் இருக்க வேண்டும். விவசாய ஆய்வு விஞ்ஞானிக்கு 21 வயது முதல் 32 வயது வரையில் இருக்க வேண்டும். அனைத்துப் பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கும் எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு அரசு விதிமுறைகளின்படி உச்சபட்ச வயதில் தளர்ச்சி வழங்கப்படும்.  முதுநிலைப்படிப்பில் என்னென்ன பாடப்பிரிவுகளில் படித்திருந்தால் இந்தப் பணியிட நிரப்புதலுக்கு தகுதி என்பது பற்றிய விபரங்கள் இணையதளத்தில் விரிவாகத் தரப்பட்டுள்ளது. அந்தப் பாடப்பிரிவுகளைப் படித்திருப்பதோடு, நெட் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  நெட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு ஆகிய இரண்டு நிலைகளில் தேர்வு முறை இருக்கும். இதில் முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரையில் நடைபெறும். முதன்மைத் தேர்வு டிசம்பர் 7 ஆம் தேதியன்று நடைபெறும். இந்த அறிவிக்கை குறித்த முழு விபரங்களை www.asrb.org.in என்ற இணைய தள முகவரியில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பம் நிரப்புவதற்கான கடைசித் தேதி மே 21, 2025 ஆகும்.

பாபா மையத்தில் பெல்லோஷிப்

ஒன்றிய அரசின் கீழ் இயங்கி வரும்  பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் 105 பெல்லோஷிப் (FELLOWSHIP) பணியிடங்கள் காலியாக உள்ளன.  இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கு எழுத்துத் தேர்வு கிடையாது. கல்வித் தகுதியை வைத்து நேர்முகத் தேர்வுக்கு தகுதியானவர்கள் அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.  கல்வித்தகுதி - முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு - 21 வயது முதல் 28 வயது வரையில் இருக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 19, 2025 ஆகும். கூடுதல் விபரங்களுக்கும், விண்ணப்பங்களை நிரப்பவும் https://recruit.barc.gov.in/ என்ற இணையதள முகவரியைப் பார்வையிடலாம்.