tamilnadu

திருவாரூர் ரைபிள் கிளப் 2 தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்று அசத்தல்

திருவாரூர் ரைபிள் கிளப் 2 தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்று அசத்தல்

பாட்டியாலா தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்

திருவாரூர், மே 7- பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பி யன்ஷிப் (நேஷனல் லெவல் ஷூட்டிங் காம்படிஷன்) 2025 ஆம் ஆண்டுக்கான போட்டி மே 2 முதல் 4 வரை பெஸ்ட் ஷூட் டர்ஸ் சூட்டிங் அகாடமியில் நடைபெற்றது. இப்போட்டியில் பஞ்சாப், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், தில்லி, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், உத்தர கண்ட் மற்றும் கேரளா ஆகிய மாநி லங்களில் இருந்து 267 வீரர்கள் கலந்து கொண்டனர்.  இதில் தமிழ்நாடு அணி சார்பாக திருவாரூர் ஏர் ரைபிள் சூட்டிங் கிளப் பயிற்சியாளர் இரா.குணசேகரன் தலைமையில், குடவாசல் அருகே உள்ள மஞ்சக்குடி சுவாமி தயானந்தா சிபிஎஸ்இ மெட்ரிக் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ரா.தர்ஷன் ராஜ் 12 வயதுக்குட் பட்ட ஆண்கள் பிரிவில் ஏர் ரைபிள் போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அதேபோல், 21 வயது முதல் 50 வயது வரை உள்ள பிரிவில் இரா.குணசேகரன், ஏர் ரைபிள் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். அதனைத் தொடர்ந்து 16 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் ஏர் பிஸ்டல் போட்டியில் கலந்து கொண்ட கொரடாச்சேரி அருகே உள்ள வாழச்சேரி மதர் இந்தியா பள்ளியின் 8 ஆம் வகுப்பு மாணவர் எஸ்.எம்.சரண்  வெள்ளிப் பதக்கமும், 16 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் ஏர் ரைபிள் போட்டி யில் கலந்து கொண்ட திருவாரூர் அருகே  உள்ள எட்டியலூர் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியின் 8 ஆம் வகுப்பு மாண வர் கே.ஸ்ரீவரதா வெண்கலப் பதக்கமும் வென்று திருவாரூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பயிற்சி யாளர் இரா.குணசேகரன் தெரிவிக்கை யில், “தமிழ்நாடு அணி சார்பாக போட்டி யில் பங்கேற்று வெற்றி பெற்ற மாண வர்களை நேரில் சந்தித்த பாட்டியாலா வாட் பிரதிநிதி மிஸ் குல்பீர் கவுர், அவர் களை தனது இல்லத்திற்கு அழைத்து பரிசுகள் வழங்கி வாழ்த்தினார். திரு வாரூர் மாவட்டத்திலிருந்து கலந்து கொண்டு பரிசு பெற்றதை அறிந்த இந்திய நுகர்வோர் சம்மேளனத்தின் தமிழ்நாடு பொதுச் செயலாளரும், திருவாரூர் மாவட்ட நுகர்வோர் அமைப்பின்  தலைவருமான டாக்டர் ஆர்.ரமேஷ் மற்றும் இந்திய நுகர்வோர் சம்மேளனத்தின் தேசிய தலைவர் வழக்கறிஞர் பிரீத்தி பாண்டியா, செயல் தலைவர் டாக்டர் எம்.செல்வராஜ், பொதுச் செயலாளர் டாக்டர்  கே.திருநாவுக்கரசு, ஹரியானா தேசிய பொதுச் செயலாளர் பூப்பால் சிங், ஒடிசா  பொதுச் செயலாளர் பார்த்தசாரதி முகியா  ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களை தில்லியில் நேரில் சந்தித்து பாராட்டினர். திருவாரூர் ஏர் ரைபிள் சூட்டிங் கிளப் பயிற்சி மையத்தில், பயிற்சி பெற்ற  மாணவர்கள் விவசாய பூமியான டெல்டா  மாவட்டத்திலிருந்து பஞ்சாப் மாநிலம் சென்று தமிழ்நாடு அணி சார்பாக போட்டி யில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட பதக்கங்களை வென்று வாகை சூடியது மிகவும் மகிழ்ச்சி யாக உள்ளது” என்றார்.  வெற்றிப் பதக்கத்துடன் திருவாரூர் வருகை தந்த மாணவர்களை பயிற்சி மையத்தின் சார்பாகவும் பெற்றோர்களும் வரவேற்று வாழ்த்தினர்.