tamilnadu

img

விளையாட்டு...

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து 2025 இறுதியில் இன்டர் மிலன்

உலகக்கோப்பைக்கு அடுத்து  மிகப்பெரிய கால்பந்து தொடரான, சாம்பியன்ஸ் லீக் தொட ரின் (ஐரோப்பா கிளப் மட்டும்) நடப்பாண்டுக்கான சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், புதன்கிழமை அன்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் இன்டர் மிலன் (இத்தாலி கிளப்) - பார்சிலோனா (ஸ்பெயின் கிளப்) அணிகள் மோதின. கடந்த வாரம் நடைபெற்ற அரையிறுதியின் முதல் லெக் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் நிறைவடைந்தது. தொடர்ந்து புதன்கிழமை அதி காலையில் நடைபெற்ற 2ஆவது லெக் ஆட்டத்தில் 4-3 என்ற கோல் கணக்கில் இண்டர் மிலன் அபார வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், இரண்டு லெக்கிலும் சேர்த்து 7-6 என்ற  கோல் வெற்றி பெற்று இண்டர் மிலன் இறுதிக்கு முன்னேறியது. இன்டர் மிலன் ஏற்கெனவே 3 முறை சாம்பியன் (1964, 1965, 2010) பட்டம் வென்றுள்ளது . அதே போல 3 முறை  இறுதி வரை (1967, 1972, 2023) முன்னேறி கோப்பையை நழுவவிட்டுள் ளது. குறிப்பாக 5 முறை கோப்பையை (1992, 2006, 2009, 2011, 2015) வென் றுள்ள பார்சிலோனா அணியோ, தொடர்ந்து 10 ஆண்டுகளாக இறுதிக்கு  முன்னேறும் வாய்ப்பை இழந்துள் ளது. பார்சிலோனா அணி 1961, 1986, 1994 ஆகிய 3 சீசன்களில் இறுதி வரை  முன்னேறி கோப்பையை பறி கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

(குறிப்பு : சாம்பியன்ஸ் லீக் கால்பந்து, சாம்பியன்ஸ் டிராபி குளறுபடியால் புதன்கிழமை அன்று வெளியான செய்தியில் பிஎஸ்ஜி உடன் பார்சிலோனா மோத உள்ளதாக செய்தி பதிவிடப்பட்டு இருந்தது. சாம்பியன்ஸ் லீக், லெக் அட்டவணை மாற்றி இருந்ததால் பல்வேறு ஆன்லைன் ஊடகங்களும் இதே தவறை செய்துள்ளன)(குறிப்பு : சாம்பியன்ஸ் லீக் கால்பந்து, சாம்பியன்ஸ் டிராபி குளறுபடியால் புதன்கிழமை அன்று வெளியான செய்தியில் பிஎஸ்ஜி உடன் பார்சிலோனா மோத உள்ளதாக செய்தி பதிவிடப்பட்டு இருந்தது. சாம்பியன்ஸ் லீக், லெக் அட்டவணை மாற்றி இருந்ததால் பல்வேறு ஆன்லைன் ஊடகங்களும் இதே தவறை செய்துள்ளன)

குஜராத் பயிற்சியாளர் நெஹ்ராவுக்கு எச்சரிக்கை ; அபராதம்

18ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், செவ்வாய்க்கிழ மை அன்று நடைபெற்ற 56ஆவது லீக்  ஆட்டத்தில் மும்பை - குஜராத் அணிகள் மோதின. மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டதால், மும்பை  - குஜராத் அணிகளின் ஆட்டம் மிக பரபரப்பாக நடைபெற்றது. கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப் பட்ட நிலையில், குஜராத் அணி 3 விக் கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை  ருசித்தது. போட்டி பிரச்சனை இன்றி முடிந்தாலும், வழக்கம் போல குஜராத் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா (இந்திய அணியின் முன்னாள் வீரர்) ஆலோசனை என்ற பெயரில் களத்தில் இருந்த குஜராத் பேட்டர்களை நோக்கி இப்படி ஆடுங்கள் ; அப்படி ஆடுங்கள் என தொடர்ச்சியாக தொல்லை கொடுத்தார்.  இந்நிலையில், நெஹ்ராவின் இந்த ஆலோசனை அடாவடிக்கு ஐபிஎல் நிர்வாகம் கண்டனம் ; எச்சரிக்கை ; அப ராதம் விதித்துள்ளது. மேலும் ஒரு தகுதி நீக்கப் புள்ளியையும் அவர் பெற்றுள்  ளார். இனிமேலும் நெஹ்ரா ஆலோச னையை தொடர்ந்தால், ஒரு போட்டி யில் விளையாட தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  ஹர்திக் பாண்டியா அதேபோல மெதுவாக பந்து வீசியதற்காக (குறித்த நேரத்திற்குள்) மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு ஐபிஎல் நிர்வாகம் ரூ.25 லட்சம் அபராதம் விதித்துள்ளது. ஹர்திக் பாண்டியாவிற்கு இந்த சீசனில் இது இரண்டாவது அபராதம் ஆகும்.

ஐபிஎல் 2025 இன்றைய  ஆட்டம்

பஞ்சாப் - தில்லி

நேரம் : இரவு 7:30 மணி இடம் : தரம்சாலா, இமாச்சலப் பிரதேசம் சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)

ஆப்ரேஷன் சிந்தூர்” தாக்குதல் திட்டம் மூலம் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது. இமயமலைச் சாரல், பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்களான ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் பகுதிகளில் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. இத்தகைய சூழலில் இமயமலைச் சாரல் அமைந்துள்ள தரம்சாலாவில் வியாழக்கிழமை அன்று ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது. போர் பதற்றம் நீடித்து வரும் சூழ்நிலையில் ஜம்மு-காஷ்மீருக்கு மிக அருகில் உள்ள பகுதியான தரம்சாலாவில் ஐபிஎல் போட்டி நடத்தப்படுவது ஆபத்தானது என ஒன்றிய அரசுக்கு அரசியல் வல்லுநர்கள், நெட்டிசன்கள், மூத்த ராணுவ வீரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் மோடி அரசோ மே 25ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தடையின்றி நடைபெறும் என அறிவித்துள்ளது.