அமைப்புசாரா தொழிலாளர் ஓய்வூதிய நிலுவையை வழங்குக! சிஐடியு வலியுறுத்தல்
சென்னை, பிப். 14- அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்கள் மூலம் வழங்கப்ப டும் மாதாந்திர ஓய்வூதியம் கடந்த மூன்று மாதங்களாக வழங்கப் படாதது குறித்து, சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் எஸ். கண்ணன், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதி யுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறி யிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் 16 நலவாரி யங்கள் மூலம் 58 வயது நிரம்பிய அமைப்புசாரா தொழிலாளர் களுக்கு மாதம் 1,000 ரூபாய் ஓய்வூதி யமாக வழங்கப்பட்டு வருகிறது. இது தொழிலாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற திட்ட மாகும். ஆனால் கடந்த டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய மூன்று மாதங்களாக இந்த ஓய்வூதி யம் வழங்கப்படவில்லை எனத் தொழிலாளர்கள் புகார் தெரி விக்கின்றனர். குறிப்பாக திண்டுக்கல் மாவட் டத்தில் 5,000-க்கும் மேற்பட்டோ ரும், சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான தையல் மற்றும் வீட்டுவேலைத் தொழி லாளர்களும் பாதிக்கப்பட்டுள்ள னர். சமீபத்தில் பெண்களுக்கு 5,000 ரூபாய் கோடைகால உதவித் தொகை வழங்கும் அரசின் அறி விப்பு பெரும் வரவேற்பைப் பெற்று உள்ளது. இத்தகைய சூழலில், வழக்கமாக வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியத்தை நிறுத்தி வைத்திருப் பது தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே அமைச்சர் இப்பிரச்ச னையில் நேரடியாகத் தலையிட்டு, அமைப்புசாரா தொழிலாளர் களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியத்தை நிலுவைத் தொகை யுடன் சேர்த்து உடனடியாக வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி யுள்ளார்.