tamilnadu

பகுதிநேர ஆசிரியர் பணி நிரந்தரம் முதல்வர் நல்ல முடிவு எடுப்பார்

“பகுதிநேர ஆசிரியர் பணி நிரந்தரம்; முதல்வர் நல்ல முடிவு எடுப்பார்!”

சென்னை, ஏப். 24 - பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்  படுவார்கள் என திமுக அளித்த தேர்தல் வாக்குறு தியை மறுக்கவில்லை. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல முடிவை  அறிவிப்பார் என சட்டப்  பேரவையில் அமைச்சர் அன்  பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேர வையில் ஏப். 24 அன்று பள்  ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை மானியக்  கோரிக்கைகள் மீது விவாதம்  நடைபெற்றது. இதில் அதி முக உறுப்பினர் செங்கோட்  டையன் எழுப்பிய கேள் விக்கு பதிலளித்து பேசிய பள்  ளிக்கல்வித்துறை அமைச்  சர் அன்பில் மகேஸ் பொய்  யாமொழி, “திமுக ஆட்சி க்கு வந்த பின்பு தான்  பகுதி நேர ஆசிரியர் களுக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டது, ரூ. 2 ஆயி ரத்து 500 ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என  திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை மறுக்க வில்லை. எனவே, பகுதி நேர  ஆசிரியர்களை பணி நிரந்த ரம் செய்வது தொடர்பான முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் நல்ல முடிவை அறி விப்பார்”என்றார்.