tamilnadu

img

அமெரிக்காவின் வரி விதிப்பு மிரட்டல் காரணமாக தமிழகத்தின் தொழில் நகரங்கள் முடங்கும் அபாயம் சென்னை ஆர்ப்பாட்டத்தில் பெ. சண்முகம் எச்சரிக்கை

அமெரிக்காவின் வரி விதிப்பு மிரட்டல் காரணமாக  தமிழகத்தின் தொழில் நகரங்கள் முடங்கும் அபாயம் சென்னை ஆர்ப்பாட்டத்தில் பெ. சண்முகம் எச்சரிக்கை

சென்னை, ஜன. 23-  அமெரிக்காவின் வரி விதிப்பால் தமிழகத்தின் தொழில் நகரங்கள் முடங்கும் அபாயம் ஏற்படும் என சென்னை ஆர்ப்பாட்டத்தில் பெ. சண்முகம் எச்சரிக்கை விடுத்தார். இந்தியப் பொருட்கள் மீது 500  சதவீதம் வரி விதிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அடாவடித் தனத்தை எதிர்த்தும், சுயாதிபத்திய இந்தியாவின் உரிமையைக் காவு கொடுக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும் இடதுசாரி கட்சிகள் சார்பில் வள்ளலார் நகர் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. வடசென்னை மாவட்டச் செய லாளர் எம்.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பேசுகையில், அமெரிக்காவின் இந்த ஆதிக்கப் போக்கிற்குக் காரணம், எண்ணெய் வளத்தை, எண்ணெய் சந்தையைக் கைப்பற்ற வேண்டும் என்பதுதான். ஈராக், ஈரான், வெனிசுலா இந்த நாடுகளிலெல்லாம் மிக அடிப்படையாக இருப்பது எண்ணெய் வர்த்தகம். எனவே எண்ணெய் வயல் களைக் கைப்பற்ற வேண்டும், எண்ணெய் சந்தையைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு சர்வதேசச் சட்டங்களைப் பற்றிச் சிறிதளவும் கவலைப்படாமல் டிரம்ப் நடந்து கொள்கிறார். அபராதவரி விதிப்பதா? இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கினால் 25 சதவீதம் அபராத வரி விதிக்கப்படும் எனக் கூறி,  25 சதவீதமாக இருந்த வரியை 50 சத வீதமாக உயர்த்தினார். இதனால் மிகக் கடுமையான பொருளாதார நெருக்க டிக்கு இந்தியா உள்ளானது. பல்லா யிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை இல்லாமல் போனது. வாரத்தில் 6 நாள் வேலை என்பதைப் பல நிறு வனங்கள் 3 நாட்களாக ஆக்கிவிட்டார் கள். உற்பத்தி செய்யப்பட்ட பொருட் களை அமெரிக்காவில் வாங்க முடி யாது என்று அங்கே இருக்கும் வர்த்த கர்கள் கூறிவிட்டார்கள். திடீரென்று 25  சதவீதம் கூடுதலாக விலை உயர்ந்தால் பொருட்களை யார் வாங்குவார்கள்? வேலைஇழப்பு அபாயம் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், சென்னை, ஓசூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி உட்பட எல்லா நகரங்களிலிருந்தும் ஏற்றுமதி நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. தூத்துக்குடியிலிருந்து கடல் உணவும்; கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, காஞ்சிபுரம் நகரங்களிலிருந்து ஜவுளியும்; ஓசூரிலிருந்து எலக்ட்ரா னிக்ஸ் பொருட்களும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் அடா வடித்தனமாக 500 சதவீதம் வரி விதிப்பேன் என்றால், இந்த நகரங்க ளில் பல லட்சக்கணக்கான தொழி லாளர் களுக்கு வேலை இழப்பும், குறுந் தொழில் உற்பத்தியாளர்கள் ஒட்டு மொத்தமாக அந்தத் தொழிலைவிட்டு வெளியேற வேண்டிய அவலநிலைக்கு உள்ளாவார்கள்.  படுமோசமான விளைவுகள்! திடீரென்று சில லட்சம் பேருக்கு  வேலை இல்லை, பல்லாயிரக்கணக் கான தொழில் கூடங்கள் மூடப்பட்டு விட்டன, வர்த்தகம் என்பது முற்றாக முடங்கிவிட்டது என்றால் இந்தியா வின், தமிழகத்தின் பொருளாதார நிலைமை எவ்வளவு மோசமான நிலைக்கு உள்ளாகும். ஆனால் இப்படி பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும் இந்த அபரிதமான வரி  விதிப்பு சம்பந்தமாக இடதுசாரி கட்சிகளைத் தவிர இந்தியாவில் வேறு எந்த ஒரு கட்சியும் வாய் திறக்காமல் இருக்கிறார்கள்.  எதிர்க்க தைரியமில்லாத மோடி!  தேர்தல் அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, இது இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தின் மீதும், தொழில் வளர்ச்சியின் மீதும், தொழிலாளர்களுடைய வேலை வாய்ப்பின் மீதும் அமெரிக்காவால் தொடுக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய யுத்தம் அல்லவா? ஆனால் இதுகுறித்து மோடி வாய் திறக்க வில்லை. இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி கூட  வாய் திறக்கவில்லை” என்று குற்றம் சாட்டினார். “அமெரிக்காவின் அடிமையாக மோடி இருக்கிறார். அமெரிக்கா எதைச் செய்தாலும் அதை ஆதரிப்பது அல்லது கண்ணை மூடிக்கொண்டு கண்டும் காணாமல் இருப்பது என்ற ஒரு அணுகுமுறையை பாஜக மோடி அரசு கடைபிடிக்கிறது. இந்தியாவின் அணிசேராக் கொள்கை, வெளியுறவுக் கொள்கை தற்போது முற்றிலும் கைவிடப்பட்டுவிட்டது. அமெரிக்கா வுக்குச் சார்பான வெளி யுறவுக் கொள்கையைத்தான் இப்போது மோடி அரசு கடைப்பிடித்துக் கொண்டி ருக்கிறது. அதன் விளைவாகத்தான் அமெரிக்க அதிபர் எதைச் செய்தா லும் அதை எதிர்ப்பதில்லை, கண்டிப்ப தில்லை. அமெரிக்க அதிபர் மிகவும் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறார். எனவே உலகத்தைப் பாதுகாப்பதற்கு, உலக மக்களைப் பாதுகாக்க, உலகில் அமைதி நிலவ, சமாதானம் நிலவ அனைத்து நாடுகளும் அமெரிக்கா வுக்கு எதிராக ஒன்று திரள வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக முழங்கும் அதே நேரம், ஏகாதிபத்தியத்தின் அடாவடியான நட வடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும், ஒத்துப்போகும் மோடி அரசுக்கு எதிராகவும் மக்களைத் திரட்ட வேண்டி யது அவசியம்” என்று சண்முகம் வலியுறுத்தினார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், சிபிஐ(எம்.எல்) விடுதலை மாநிலச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி ஆகியோரும் பேசினர். இதில் மாநிலக்குழு உறுப்பினர்கள் வெ. ராஜசேகரன், எல். சுந்தரராஜன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா, சிபிஐ மாவட்டச் செயலாளர்கள் வேம்புலி வெங்கடேசன், சிவா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.