tamilnadu

img

மணமக்களை அரிசி தூவி வாழ்த்துவதைத் தவிருங்கள் ‘அரிசி’ பட விழாவில் பெ. சண்முகம் வேண்டுகோள்

மணமக்களை அரிசி தூவி வாழ்த்துவதைத் தவிருங்கள் ‘அரிசி’ பட விழாவில் பெ. சண்முகம் வேண்டுகோள்

சென்னை, பிப். 14- திருமண நிகழ்வுகளில் அரிசி தூவி மணமக்களை வாழ்த்துவதைத் தவிர்க்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வேண்டு கோள் விடுத்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  மூத்த தலைவர் ஆர். முத்தரசன் மற்றும் சமுத்திரகனி நடிப்பில் உருவா கியுள்ள ‘அரிசி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா  சனிக்கிழமையன்று சென்னையில் நடைபெற்றது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இசைத் தட்டை வெளியிட, மதிமுக பொதுச்செயலா ளர் வைகோ அதனைப் பெற்றுக் கொண்டார். விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “விவசாயிகள் உரிமைக்கா கக் களத்தில் போராடும் முத்தரசன், திரையிலும் விவசாயியாகவே வாழ்ந் துள்ளார்; கம்யூனிஸ்ட்டுகள் கையில் எடுக்கும் போராட்டங்களைப் போலவே இத்திரைப்படமும் வெற்றி பெறும்” என்றார். உணவு வீணாவதைத் தடுப்போம் தொடர்ந்து வாழ்த்திப் பேசிய பெ.சண்முகம், “தமிழகத்தில் விளை நிலங்கள் வேகமாகப் பிற பயன் பாட்டிற்கு மாற்றப்படுவது கவலை யளிக்கிறது. திருமணங்களில் அரிசி யைத் தூவி வீணாக்குவதைத் தடுத்து, அதற்குப் பதிலாகப் பூக்களைப் பயன்படுத்தி வாழ்த்தும் முறையைப் பின்பற்ற வேண்டும். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான திருமணங்களில் சிதறும் அரிசி மிதிப்பட்டு வீணாவதை இளைஞர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்” என வலியுறுத்தினார். விவசாயிகளின் முதுகெலும்பை முறிக்கும் ஒப்பந்தம் மக்கள் தொகை பெருகும் சூழலில் விளைநிலங்களைப் பாதுகாக்கப் பொதுமக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். மேலும், இந்திய- அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் உள் நாட்டு விவசாயிகளின் முதுகெலும்பை முறிக்கும் என எச்சரித்த அவர், விவசா யிகளின் வலியைப் பேசும் இத்திரைப் படம் வெற்றிபெற வாழ்த்தினார். இவ்விழாவில் கு. செல்வபெருந் தகை (காங்கிரஸ்), மு. வீரபாண்டியன் (சிபிஐ), தொல். திருமாவளவன் (விசி க), காதர் மொகைதீன் (ஐயுஎம்எல்), பழ. ஆசைத்தம்பி (சிபிஐ (எம்-எல்(எல்)) உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.