tamilnadu

img

எட்டு எம்.பி.க்கள் இடைநீக்கம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

எட்டு எம்.பி.க்கள் இடைநீக்கம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

புதுதில்லி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்ட தைக் கண்டித்து, எதிர்க்கட்சிகள் போராட்ட முழக்கங்கள் எழுப்பியதால்  புதன்கிழமை அன்று மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. ராணுவ முன்னாள் தலைமை தளபதி நரவானே எழுதிய சுயசரிதை புத்தகத்தில் சீனா - இந்தியா எல்லையில் பதற்றம் உரு வான போது பிரதமர் மோடி முறையாக வழிகாட்டவில்லை என்பதை குறிப்பிட்டி ருந்தார். அந்த புத்தகத்தை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட அனுமதி வழங்கவில்லை.  அது குறித்து  நாடாளுமன்றத்தில் பேச  ராகுல் காந்தி வலியுறுத்தினார். அப்போது அவையின் விதிகளை மீறியதாகவும், அவைத் தலைவரை நோக்கி காகிதங்க ளை வீசியதாகவும் கூறி பட்ஜெட் கூட்டத் தொடரின் மீதமுள்ள காலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி., சு.வெங்கடேசன் உள்ளிட்ட 8 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் புதனன்று இந்த எம்.பி.க்கள், பிரதமர் மோடி அமெரிக்கா உடன் சமரசம் செய்து கொண்டார் என்பதை குறிப் பிடும் வகையில் “பிரதமர் மோடி சமரசம் செய்து கொண்டார் “ (PM is compromis ed) என்ற வாசகங்கள் அடங்கிய பதாகை களை ஏந்தி நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்ச னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பும் போதெல்லாம், எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க ஆளும் கட்சி முயற்சிக்கிறது என்றும் குற்றம் சாட்டப்பட்டது.