பாஜக ஆளாகவே மாறிப்போனார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி!
தமிழகத்தின் நலன் குறித்து கவலை இல்லை
கோயம்புத்தூர், ஜூலை 12- சேராத இடம் சேர்ந்த தால் பாஜகவின் ஆளாகவே எடப்பாடி பழனிசாமி மாறி விட்டார், அவருக்கு தமிழ கத்தின் நலன் குறித்த எந்த கவலையும் இல்லை என பெ. சண்முகம் சாடியுள்ளார். வழக்கறிஞர் அரங்க உறுப்பினர்களுக்கான 2 நாள் அரசியல் பயிற்சி முகா மைத் துவக்கி வைப்பதற் காக, கோவை வந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் பெ.சண்முகம், சனிக்கிழ மையன்று செய்தியாளர் களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அமித் ஷாவா, எடப்பாடியா; யார் கூறுவது உண்மை? பாஜக - அதிமுக கூட்டணி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, தொடர் குழப்பத் தில் போய்க் கொண்டிருக்கி றது. 2026-இல் கூட்டணி ஆட்சிதான் எனக் கூறி மீண் டும் அமித் ஷா உறுதிப்படுத் தினார். ஆனால், எடப்பாடி பழனிசாமியோ ‘தனிப் பெரும்பான்மை யுடன், தனித்து ஆட்சி அமைப் போம்’ எனக் கூறிக் கொண்டி ருக்கிறார். ‘இந்தியா - பாகிஸ் தான் போரை நான் தான் நிறுத்தினேன்’ என அமெ ரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் 15 முறைக்கு மேல் கூறிவிட்டார். அதேபோல தான், ‘தமிழகத்தில் கூட்டணி ஆட்சி’ என அமித் ஷா தொட ர்ந்து கூறி வருகிறார். கூட்ட ணியில் இருக்கும் குழப் பத்தை தெளிவுபடுத்த வேண்டியவர் எடப்பாடி பழனிசாமி தான். தமிழகத்தில் பாஜக காலூன்ற விட மாட்டோம் மகாராஷ்டிரா, பீகார் உள் ளிட்ட மாநிலங்களில் கூட் டணி ஆட்சி மூலம் கூட்டணி கட்சிகளை பாஜக எப்படி கபளீகரம் செய்தது என்பது அனைவருக்கும் தெரியும். பாஜகவை தமிழகத்தில் கால் ஊன்ற விடக்கூடாது என்பதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உறுதியாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் கூட்டணி வைத்தவுடன் பாஜக ஆளா கவே மாறிவிட்டார். இந்து அறநிலையத்துறை குறித்து பாஜக என்னவெல்லாம் கூறு கிறதோ, அதனை இப்போது எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். இதுவரை பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டுமே பேசி வந்ததை, சேராத இடம் சேர்ந்துள்ள எடப்பாடி பழ னிசாமியும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளார். முதல்வராக இருந்தவருக்கு அடிப்படை கூடவா தெரியாது? அதன் விளைவு தான் இந்து அறநிலையத்துறை சார்பில் கல்லூரி கட்டக் கூடாது என அவர் கூறியி ருப்பதாகும். அறநிலை யத்துறை மூலம் கல்வி நிறு வனங்களை ஏற்படுத்துவது, சட்டப்படியான ஒன்று தான். காமராஜர் காலத்தில் இருந்தே இது நடந்து வருகிறது. தமி ழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு இந்த அடிப்படை விஷயம் கூடவா தெரியாது. எடப்பாடி பழனிசாமியின் இந்த கரு த்தை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது. எடப்பாடி பழனிசாமி தமிழகத்திற்கு நல்லது செய்யாவிட்டால் பரவாயில்லை, ஆனால் கெட்டதை செய்யாமல் இருக்க வேண்டும். தமிழக நலனிலும் எடப்பாடிக்கு அக்கறையில்லை ஒன்றிய அரசு கல்விக்கு தரவேண்டிய நிதியை தமி