tamilnadu

img

தரங்கம்பாடி அருகே புதிய அங்காடி கட்டடம் திறப்பு விழா

தரங்கம்பாடி அருகே புதிய அங்காடி கட்டடம் திறப்பு விழா 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி 7 ஆவது வார்டில் ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கட்டப்பட்ட புதிய அங்காடி கட்டிடத்தை எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் திறந்து வைத்தார்.
தரங்கம்பாடி 7 ஆவது வார்டு கொட்டுபாளையத்தில் முன்னாள் எம்‌.பி இராமலிங்கம்  தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சமும், தரங்கம்பாடி பேரூராட்சி நிதியில் இருந்து ரூ.7 லட்சத்து 50 ஆயிரமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய ரேஷன் அங்காடிக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது.

புதிய கட்டடத்தின் திறப்பு விழாவிற்கு பேரூராட்சி மன்றத் தலைவர் சுகுணசங்கரி குமரவேல் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் பூபதி கமலகண்ணன் முன்னிலை வகித்தார்.
பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா எம். முருகன் கலந்து கொண்டு புதிய அங்காடி கட்டிடத்தை திறந்து வைத்தார். வட்ட வழங்கல் அலுவலர் சேதுராமலிங்கம், பேரூராட்சி துணைத் தலைவர் பொன். ராஜேந்திரன், 7 ஆவது வார்டு பேரூராட்சி உறுப்பினர் ஆதிலெட்சுமி வரதராஜன், நகர திமுக செயலாளர் முத்துராஜா மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விற்பனையாளர் கிருத்திகா நன்றி கூறினார்.

மதுப்பழக்கம் மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து வட்டார அளவிலான விழிப்புணர்வு பேரணி பொன்னமராவதியில் நடைபெற்றது. கோட்டக் கலால் அலுவலர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். வட்டாட்சியர் சாந்தா விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கையில் பதாகைகள் ஏந்தியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் பேரணியில் பங்கேற்றனர்.