சிந்தனை சிற்பி தோழர் ம.சிங்காரவேலர் 80ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி சிஐடியு சார்பில் ராயபுரம் மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் சிபிஎம் பகுதிச் செயலாளர் எஸ்.பவானி, சென்னை செங்கை மீன் பீடி சங்க மாவட்டத் தலைவர் ஆர்.லோகநாதன், செயலாளர் கே.செல்வானந்தன், ஒருங்கிணைப்பு குழு செயலாளர் டி.வெங்கட், எஸ்.பாப்பூ (பீடி சங்கம்), தமிம் சேட் சின்னராஜ் பச்சையப்பன் (வியாபாரிகள் சங்கம்), அமைப்புசாரா சங்கத்தின் பகுதி செயலாளர் எம்.ஜாவீத், பொருளாளர் ஏ.குணசேகரன், நிர்வாகிகள் எம்.அண்ணாமலை, லட்சுமி, கவுஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
