குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9ஆயிரம் வழங்க வேண்டும் பிஎப் அலுவலகம் முன்பு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை, பிப். 11 - அகவிலைப்படியுடன் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9ஆயிரம் வழங்க கோரி புதனன்று (பிப்.11) ராயப்பேட்டை பிஎப் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விண்ணப்பித்த அனைவருக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி உயர் ஓய்வூதியம் கொடுக்க வேண்டும், இபிஎப் ஓய்வூதியர்களுக்கு இஎஸ்ஐ மருத்துவ சேவை வழங்க வேண்டும், வைப்பு நிதியை பங்குமார்க்கெட்டில் முதலீடு செய்யக் கூடாது, பறிக்கப்பட்ட ரயில் கட்டண சலுகையை திரும்ப தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இபிஎப் ஓய்வூதியர் சங்கங்களின் அகில இந்திய கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய தலைவர்கள், ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க பணம் இல்லை என்று ஆட்சியாளர்களும், அதிகாரி களும் பொய் சொல்கின்றனர். இபிஎப் வாரி யத்தில் ரூ.20 லட்சம் கோடி பணம் உள்ளது. அதற்கு வட்யடியாக ஆண்டுக்கு ரூ.61 ஆயிரம் கோடி கிடைக்கிறது. அதி லிருந்து ரூ.23ஆயிரம் கோடி மட்டுமே ஓய்வூ தியமாக வழங்குகின்றனர். எஞ்சிய ரூ.37ஆயிரம் கோடி என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை என்றனர். இந்தப்போராட்டத்தில் சென்னை இபிஎப் பென்சனர் நலச்சங்கத்தின் தலை வர் ஆர்.கிருஷ்ணமூர்த்த, செயலாளர் கே.ராமையன், இபிஎஸ்-95 அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கத்தின் தலைவர் கே.கனகராஜ் உள்ளிட்ட 4 அமைப்புகளின் தலைவர்கள் பேசினர்.
