tamilnadu

img

ஈரோட்டில் கூட்டுறவு சிறப்பங்காடி திறப்பு

ஈரோடு, பிப்.11- ஈரோடு பேருந்து நிலைய வளாகத்தில்  அமைக்கப்பட்ட கூட்டுறவு சிறப்பங்காடி யினை அமைச்சர் முத்துசாமி புதனன்று திறந்து வைத்தார். ஈரோடு மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, 1964 ஆம்  ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு  கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டு வருகி றது. இப்பண்டகசாலை ஈரோடு மாவட்டத்தில்  சிந்தாமணி கூட்டுறவு சுயசேவைப்பிரிவுகள், கூட்டுறவு மருந்துப்பிரிவுகள், முதல்வர் மருந் தகங்கள் மற்றும் முதல்வர் மருந்தக கிட்டங்கி,  பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை  நிலையங்கள், உழவர்சந்தை, காய்கறிப் பிரிவு, பண்ணை பசுமை நுகர்வோர் அங் காடிப்பிரிவுகள் ஆகியவற்றை நடத்தி வருகி றது. மேலும், இப்பண்டகசாலை முதன்மை சங்கமாக செயல்பட்டு, ஈரோடு, கொடுமுடி மற்றும் மொடக்குறிச்சி ஆகிய தாலூகாவில் உள்ள 372 நியாய விலைக்கடைகளுக்கு பொதுவிநியோகத்திட்டப் பொருட்களை நகர்வு செய்து வருகிறது. மேலும், ஈரோடு நக ரத்தில் 25 நியாய விலைக்கடைகளையும் நடத்தி வருகிறது. மேலும், இப்பண்டக சாலை யில் ‘பொன்னமுதம்’ என்ற பெயரில் கோதுமை மற்றும் ராகி மாவு அரைத்து, குறை வான விலையில் தமிழகத்தில் மற்ற கூட்டு றவு நிறுவனங்களுக்கு விற்பனை மேற் கொண்டு வருகிறது. இப்பண்டகசாலை 2024-2025 ஆம் ஆண்டு ரூ.70 கோடி அளவிற்கு வணிகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், ஈரோடு மத்திய பேருந்து  நிலையம் வளாகத்தில், கூட்டுறவுத்துறை சார் பில் அமைக்கப்பட்ட சிந்தாமணி கூட்டுறவு சிறப்பங்காடியினை வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி புதனன்று திறந்து வைத்து, முதல் விற்பனையினை துவக்கி  வைத்தார். அனைத்து கூட்டுறவு மருந்துப் பிரிவுகளிலும் மருந்துப் பொருட்களுக்கு 20%  வரை நுகர்வோர்களுக்கு தள்ளுபடி வழங் கப்பட்டு வருகிறது. மேலும், காலணிப்பிரி வில் காலணிகளுக்கு 10% வரை சிறப்பு தள்ளு படி வழங்கப்படுகிறதென தெரிவிக்கப்பட் டுள்ளது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர்  ச.கந்தசாமி, சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந் திரகுமார், மாநகராட்சி துணை மேயர் திரு. வே.செல்வராஜ் உட்பட துறை சார்ந்த அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.