tamilnadu

img

சிங்காரவேலர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை

சிங்காரவேலர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை 

சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலர் 80-வது நினைவு தினத்தை முன்னிட்டு கடலூர் சிஐடி அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கடலூர் மாவட்ட மீன்பிடி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் பி.பாலு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி.மாதவன், சிஐடியு மாவட்ட செயலாளர் டி.பழனிவேல், மாவட்ட துணை தலைவர்கள் வி.சுப்புராயன், எஸ்.சாந்தகுமாரி, மாவட்ட இணை செயலாளர்கள் வி.திருமுருகன், கே.ஸ்டாலின், முன்னாள் மாவட்ட இணை செயலாளர் ஜெ.ராஜேஷ் கண்ணன், மீன்பிடி சங்க மாவட்ட செயலாளர் பி.ஏழுமலை, மாவட்ட பொருளாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாவட்ட சிறுபான்மை நல குழு தலைவர் எஸ்.கே.பக்கிரான், த.மு.எ.க.ச மாவட்ட செயலாளர் பால்கி, சிஐடியு முன்னாள் மாவட்ட தலைவர் ஜி.பாஸ்கரன், செயற்குழு உறுப்பினர் ஜே.பொன்னழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.