tamilnadu

img

குற்றவாளிகளுக்குத் துணைபோகும் களமருதூர் காவல் துறையினர் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

குற்றவாளிகளுக்குத் துணைபோகும்  களமருதூர் காவல் துறையினர் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி, பிப்.11- களமருதூர் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், குற்றவா ளிகளுக்குத் துணைபோகும் களமருதூர் காவல் நிலையத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்   பேட்டை அருகே உள்ள அயன் வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூமிகா (19). இவ ருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு குடும்பத்தினருக்கும் இடையே வீட்டு மனை தொடர்பாகத் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், பூமிகா வீட்டில் தனி யாக இருந்தபோது, மற்றொரு குடும்பத்தி னருக்கு ஆதரவாக வெளியூரில் இருந்து வந்த 10-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் பூமிகாவைக் கடுமையாகத் தாக்கி யுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பூமிகா கள மருதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், புகாரைச் சரியாக விசாரிக்காத போலீசார், இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட இளம்பெண் மீதே வழக்குப் பதிவு செய்த காவல்துறையினரின் போக்கைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். திருநாவலூர் மேற்கு ஒன்றிய செய லாளர் கே.ஆனந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஆனந்தன், டி.ஏழுமலை, எம்.செந்தில், இ.அலமேலு, மாவட்டக் குழு உறுப்பினர் டி.எஸ்.மோகன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். இதில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கே.அய்யனார், கே.சிவக்குமார், டி.ரகு, வி.சுரேஷ், எம்.வீரன், எஸ்.விசாலாட்சி, களமருதூர் கே.சக்திவேல், பி.வேலு, எஸ்.வேல்முருகன், என்.செந்தில் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.