tamilnadu

img

மார்ச் 14-இல் தமிழக பட்ஜெட்!

சென்னை: தமிழக அரசின் 2025-26ஆம் நிதி யாண்டிற்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 14 அன்று  தாக்கல் செய்யப்பட உள்ள தாக, சட்டப் பேரவைத் தலை வர் மு.அப்பாவு தெரி வித்துள்ளார். முதல்வர் மு.க. ஸ்டா லின் தலைமையில் தலை மைச் செயலகத்தில் கடந்த  பிப்ரவரி 10 அன்று அமைச் சரவைக் கூட்டம் நடை பெற்றது. அதில், எடுக்கப் பட்ட முடிவின்படி பட்ஜெட்டை மார்ச் 14 அன்று காலை 9.30-க்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல்  செய்வார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், வேளாண்  பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இருக்கும்  நிதிச்சுமைக்கு மத்தியில், ஒன்றிய பாஜக அரசு தமி ழகத்தை முழுமையாகப் புறக்கணித்து வருதால், 2025-26 பட்ஜெட் தமிழக அரசுக்கு சவாலாகவே இருக் கும் என்றும், எனினும், நிதி நிலை அறிக்கையில், புதிய சலுகைகள் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அளந்துவிட்ட ஒன்றிய அமைச்சர்

மதுரை: பிஎம்ஸ்ரீ  நிதியை தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டுமெனில்  புதிய கல்விக்கொள்கை யில் தமிழக அரசு கையெ ழுத்திட வேண்டும். உலகள வில் இந்திய இளைஞர்கள் போட்டியிடுவதற்கே புதிய  கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ள தாக அளந்துவிட்டிருக் கிறார் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன்.

நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்

விழுப்புரம்: கடந்த 2019 ஆம் ஆண்டு விக்கிர வாண்டி தொகுதி இடைத் தேர்தலின் போது, நேமூர் கிராமத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார் சீமான்.  இதனால் இவர் மீது பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்காக செவ்வாயன்று விக்கிர வாண்டி நீதிமன்றத்தில் சீமான் ஆஜரானார்.