tamilnadu

img

அடுத்த ஆண்டில் ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி பணிகள் நிறைவுபெறும்

இராமநாதபுரம், பிப்.2-  அடுத்த ஆண்டில் பிரப்பன்வலசையில் ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி பணிகள் நிறைவுபெறும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள் ளார். இராமநாதபுரம் மாவட்டம், பிரப்பன்வலசை கடற்கரை பகுதியில் ரூ.42.90 கோடியில்  ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி பயிற்சி மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை துணை முத லமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:  இது தொடர்பான பேட்டியில் அவர், இராமநாதபுரம் மாவட்டத்தில் பிரப்பன்வலசை கிராமத்தில் சர்வதேச தரத்திலான (இண்டர்நேசனல் ஸ்டாண்டர்டு) வாட்டர் ஸ்போர்ட்ஸ் (நீர் விளையாட்டு) அகாடமி அமைக்க முதலமைச்சர்  42.90 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து ஆணையிட்டிருந்தார்.

கடற்கரை அருகே அமையவுள்ள காரணத்தால், கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியை பெற வேண்டிய சூழல் இருந்தது.தற்போது அதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளதால் இந்த பணிகளை விரைந்து தொடங்க திட்டமிட்டு உள்ளோம். வருகின்ற பிப்ரவரி 5 ஆம் தேதி இந்த பணிகளை துவங்க இருக்கின்றோம். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள்ளாக இந்த ஸ்போர்ட்ஸ் அகாடமி அமைய இருக்கின்றது. இந்த புதிய அகாடமியில் தங்குமிட வசதி (ஹாஸ்டல்), ஜிம், வாட்டர் ஸ்போர்ஸ் சென்டர், செயில் போட் பார்க்கிங் (sail boat parking), போட் ஹாங்கர், வேர்ல்டு கிளாஸ் டிரையினிங் கம் கோச்சிங் அகாடமியும் அமைய இருக்கின்றது. இந்த அகாடமியில் செயிலிங், கேனோயிங், சர்ப்பிங், கயாக்கிங் மற்றும் ஸ்டாண்ர்டப் பேடில் போன்ற விளையாட்டுகளுக்கு உலகத் தரம் வாய்ந்த பயிற்சிகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.