tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பாபநாசம் அருகே  நூறாவது பிறந்தநாள்  கொண்டாடிய மூதாட்டி

பாபநாசம் மே 20
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே, மூதாட்டி ராஜாமணி என்பவருக்கு நூறாவது வயது தொடங்குவதையொட்டி, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் சார்பில் நூறாவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலயத்தில் திருப்பலி நடத்தப்பட்டு, பாபநாசம் மஹாலில் கேக் வெட்டி இனிப்பு வழங்கி, விருந்து உபசரிப்பு நடைபெற்றது.
பாபநாசம் செட்டி தெருவைச் சேர்ந்தவர் தாவீது. இவரது மனைவி ராஜாமணி (100) 1925 ஆம் ஆண்டு சிவகங்கை‌ மாவட்டம் சருகணியில் பிறந்தார். 85 வயது வரை சாலையோரத்தில் மாம்பழம் விற்பனை செய்து வந்தார். ராஜாமணியின் குடும்பத்தில் 2 மகன்கள், 6 மகள்கள், மருமகன்கள், மருமகள்கள், பேரன் பேத்திகள், கொள்ளுப்பேரன் பேத்திகள், எள்ளுப்பேரன், பேத்திகள் என 107 பேர் உள்ளனர். ஒரு பையன் இறந்து விட்டார். 3 பெண்கள் இறந்து விட்டனர். ஒரு பையனான செபஸ்டீன் ஆனந்த பாபு வீட்டில் ராஜாமணி வசித்து வருகிறார். ஒரு 
மகள் அந்தமானில், இரு மகள்கள் தஞ்சாவூரில் உள்ளனர்.

திருமயத்தில்  வாலிபர் சங்கம் ரத்த தான முகாம்

புதுக்கோட்டை, மே 20-  புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. திருமயம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற முகாமிற்கு வாலிபர் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் சந்தோஷ் தலைமை வகித்தார். முகாமை தொடங்கி வைத்து திருமயம் காவல் ஆய்வாளர் மருது, மருத்துவர்கள் இரா. இராஜசேகர பாண்டியன், வி. கிருபாசங்கர் ஆகியோர் பேசினர். ரத்ததான முகாமின் நோக்கம் குறித்து வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். ஜனார்த்தனன், செயலாளர் ரா.மகாதீர் ஆகியோர் பேசினர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், செயற்குழு உறுப்பினர் ஜி.நாகராஜன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் இரா. வசந்தகுமார், அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் கே.எம். ரேவதி, ஜனநாயக மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் ஜெ. வைகைராணி, ஒன்றியச் செயலாளர் சரண்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.