திருவாரூரில் தீக்கதிர் 300 ஆண்டு சந்தாக்கள் வழங்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டக்குழு சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்திடம், தீக்கதிர் 300 ஆண்டு சந்தாவுக்கான தொகை ரூ. 6,90,000 மற்றும் கியூபா ஆதரவு நிதி ரூ. 60,000 மாவட்ட செயலாளர் டி.முருகையன் வழங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஐன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.