வங்கக்கடலில் ஞாயிறன்று மதியம் நில நடுக்கம் ஏற்பட்டு உள்ளது. மதியம் 12.02 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 14.04 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 92.95 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முத லில் தீர்மானிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடி யாக வெளியிடப்படவில்லை.
துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த “இந்தியா” கூட்டணி திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காக இந்தியா கூட்டணி யில் உள்ள கட்சிகளின் கருத்தை பெற காங்கி ரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முடிவெ டுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பெங்களூரில் 3 வந்தே பாரத் ரயில் சேவை மற்றும் மஞ்சள் தடத்தில் மெட்ரோ ரயில் சேவை ஆகியவற்றை பிரதமர் மோடி ஞாயிறன்று தொடக்கி வைத்தார்.
உத்தரகண்டில் அடிக்கடி நிகழும் இயற்கை பேரிடர்களில் சிக்கி கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 3,500 பேர் பலியாகியுள்ளதாக புள்ளி விவ ரங்கள் தெரிவிக்கின்றன.