states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கேரள கல்வி துறை அமைச்சர் சிவன் குட்டி

பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சேர வேண்டும் என்று ஒன்றிய அரசு நெருக்கடி கொடுக்கிறது. இன்று காலை திட்டத்தில் சேர்ந்தால் மாலையே நிதி வழங்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் கூறுகிறார். ஆனால் கேரளா அதற்கு தயாராக இல்லை. இது கூட்டாட்சி மற்றும் ஜனநாயக நடைமுறைகளுக்கு எதிரானது.

திரைக்கலைஞர் திவ்யா ஸ்பந்தனா

எந்த வகையிலும் இந்தியாவில் வன்முறையை ஆதரிக்க முடியாது. ஆனாலும் பாகிஸ்தானுடன் போரிடுவது ஒரு தீர்வாக அமையாது. மக்களைப் பாதுகாக்கத்தான் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆனால், ஒன்றிய பாஜக அரசின் தோல்விக்காக போர் அறிவிப்பது முறையானதல்ல.

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவது சமூக நீதியை நோக்கிய நீண்ட பயணத்தின் முதல் படியாகும். மக்கள்தொகை கணக்கெடுப்புத் தரவு சமூகப் பாதுகாப்பு, இடஒதுக்கீடு கொள்கைகள் பற்றிய விரிவான மறுபரிசீலனைக்கு வழிவகுக்கும். இடஒதுக்கீடுகளுக்கான தன்னிச்சையான வரம்பும் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

2022ஆம் ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை 44 முறை வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி. இது தவிர 250 முறை உள்நாட்டு பயணங்களும் மேற்கொண்டு ள்ளார். எனினும், ஒரு நொடி கூட மணிப்பூருக்கு ஒதுக்கப்படவில்லை.