இமயமலைச் சாரலில் இன்று ஐபிஎல் போட்டி தரம்சாலாவில் பதற்றமான சூழல்
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் (இமயமலைச் சாரல்) ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி னர். இந்த தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த தாக்குதல் பதற்றத்துக்கு இடையே இமயமலைச் சாரலில் அமைந்துள்ள இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் பிரபல சுற்றுலா தலமான தரம்சாலாவில் ஞாயிறன்று ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளது. பஹல்காம் - தரம்சாலா இடையே வெறும் 375 கிமீ தொலைவே உள்ள நிலையில், பயங்கரவாதிகள் தாக்கு தல் சம்பவத்துக்கிடையே தரம்சாலா வில் ஐபிஎல் போட்டி நடத்தப்படு வது மிகவும் ரிஸ்க் ஆனது மற்றும் தேவையற்றது என சமூகவலைத் தளங்களில் கோரிக்கை கிளம்பி யுள்ளது. இதனால் தரம்சாலாவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.