tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

‘வாழ்வு இனிது’ கருத்தரங்கம்'

உதகை, மே 3– கூடலூரில் பொதுத்துறை ஊழியர் சங்கங்களின் ஒருங் கிணைப்புக்குழு சார்பில் வாழ்வு இனிது என்கிற தலைப்பில் மே தின கருத்தரங்கம் நடைபெற்றது. மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் மேதின சிறப்பு கருத்தரங்கம் கூடலூரில் நடைபெற்றது. இந்த கருத்தரங் கிற்கு ஒருங்கிணைப்புக்குழு தலைவர் சிவபெருமாள் தலைமை ஏற்றார். பொருளாளர் செந்தில்குமார் வரவேற்று  பேசினார். இதில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன் னாள் மாநிலத் தலைவர், பேராசிரியர் ந.மணி மற்றும் தமுஎகச பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் கருத் துரையாற்றினர். இதில், கூடலூர் பேருந்து நிலையத்தில் மழைநீர் தேங்கா தவாறு செம்மைப்படுத்தி வேண்டும். பேருந்து நிலையத்தை யும், சாலையையும் வேறுபடுத்தி தடுப்புச்சுவர் எழுப்பி  பேருந்து உள்ளே, வெளியே செல்ல ஏதுவாக அமைத்திட  வேண்டும். கூடலூரில் இருந்து கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். சாலை விபத்துகள் ஏற்படாத வகையில், குண்டும், குழியுமான கூடலூர் சாலைகளை சீரமைக்க வேண் டும். கூடலூர் அரசு தலைமை மருத்துவமனை அருகே கடந்த மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் புதையுண்ட 9 வீடுகளில் குடியிருந்த மக்கள், தற்போது வீடுகளின்றி தவித்து வரு கின்றனர். அவர்களுக்கு மாற்று குடியிருப்புகள் வழங்க  வேண்டும். கூடலூர் மருத்துவமனையில் போதிய வசதி களின்றி உள்ளது, எனவே மருத்துவர் உள்ளிட்ட காலிப்பணி யிடங்களை நிரப்பிடவும், நவீன மருத்துவ கருவிகளை நிறுவி தரமான மருத்துவ சேவையை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில், செயலாளர் கருணாநிதி நன்றி கூறினார்.

சிறையில் கஞ்சா: 2 பேர் மீது வழக்கு

கோவை, மே 3- கோவை மத்திய சிறையில் கஞ்சா வைத்திருந்த இரு கைதிகள் மீது பந்தய சாலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உள்ளனர். கோவை மத்திய சிறையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். கொலை, கொள்ளை, அடி தடி, கஞ்சா, போதைப் பொருட்கள் வழக்குகளில் சிறை  சென்றவர்கள் மத்தியில் கஞ்சா புழக்கம் இருப்பதாக புகார்கள் எழுந்தனர். இந்நிலையில், கடந்த 1 ஆம் தேதி யன்று மாலை சிறை காவலர்கள் சிறை வளாகத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது திருப்பூரைச்  சேர்ந்த நவுபல், ஈரோட்டைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் ஆகியோரிடம் ஒரு கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது  குறித்து சிறை வார்டன் சரவணக்குமார் பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் சனியன்று நடைபெற்றது.

ஆட்சேர்ப்பு முகாம்

கோவை, மே 3– ஊர்க்காவல் படையில் தன்னார்வலர்களாக பணி யாற்ற விரும்பும் நபர்களை இணைத்திட ஆள்சேர்ப்பு முகாம் சனியன்று கோவை  காவலர் பயிற்சி பள்ளி மைதா னத்தில் நடைபெற்றது. இந்த முகாமில், ஆண்கள் மற்றும் பெண்கள் என ஏராளமா னோர் கலந்து கொண்டனர். கல்விச் சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டதுடன், உயரம் மற்றும் எடை அளவீடுகளும் மேற்கொள்ளப்பட்டன.

அணை நிலவரம்

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:37.72/72அடி நீர்வரத்து:42கனஅடி நீர்திறப்பு:1180கனஅடி மழையளவு:22மி.மீ சோலையார் அணை நீர்மட்டம்:1.98/160அடி நீர்வரத்து:9.96கனஅடி நீர்திறப்பு:9.96கனஅடி மழையளவு:13மி.மீ ஆழியார் அணை  நீர்மட்டம்:70.25/120அடி நீர்வரத்து:341கனஅடி நீர்திறப்பு:56கனஅடி மழையளவு:6.6மி.மீ திருமூர்த்தி அணை  நீர்மட்டம்:35.24/60அடி  நீர்வரத்து:843கனஅடி நீர்திறப்பு:1032கனஅடி அமராவதி அணை நீர்மட்டம்: 47.90/90அடி நீர்வரத்து:14கனஅடி நீர்திறப்பு:68கனஅடி