tamilnadu

நூறு நாள் வேலை திட்டத்தில் முறைகேடு பணம் வசூலிக்க ஆட்சியர் உத்தரவு

நூறு நாள் வேலை திட்டத்தில் முறைகேடு பணம் வசூலிக்க ஆட்சியர் உத்தரவு

கோபி, மே 3 – கோபி அருகே நஞ்சைகோபி ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் முறைகேடாக பணம் எடுத்தவர்களுக்கு எதிராக நட வடிக்கை எடுக்கவும், அந்தப் பணத்தை வசூலிக்கவும் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவு அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது. ஈரோடு மாவட்டம், கோபி ஒன்றி யத்துக்குட்பட்ட நஞ்சைகோபி ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற் பட்ட குடும்பத்தினர் 100 நாள் வேலைத் திட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். இந்நிலையில், நஞ்சை கோபி ஊராட்சியில் கடந்த 2022-23 மற் றும் 2023-24 நிதியாண்டுகளில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிக்கு வராதவர்களின் அட்டைகளைப் பயன்படுத்தி, பணிக்கு வந்ததாகப் பொய்யான வருகைப் பதிவேடு தயாரிக்கப்பட்டு அரசுப் பணம் முறை கேடாகப் பெற்றுத் தரப்பட்டதாக சசி குமார் என்பவர் புகார் அளித்தார்.  இதனையடுத்து, கடந்த மார்ச் மாதம் மாவட்டக் குறைதீர்க்கும் அலு வலர் காந்திமதி தலைமையில் விசா ரணைக்குழு அமைக்கப்பட்டு நஞ்சைகோபி ஊராட்சி மன்ற அலுவ லகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.  விசாரணைக் குழுவினர், பணிக்கு  வராதவர்கள் மற்றும் பணிக்கு வந்த வர்கள் என இரு தரப்பினரிடமும் தனித்தனியாக வாக்குமூலம் பெற்ற னர். இந்த விசாரணையின் அறிக் கையை மாவட்ட ஆட்சியருக்கு சமர்ப்பித்ததில், நஞ்சைகோபி ஊராட்சியில் வேலைக்கு வராதவர்க ளின் அட்டைகளைக் கொண்டு போலி யாகப் பதிவுகள் செய்து ரூ.8,69,658  அரசுப் பணம் முறைகேடாக எடுக்கப் பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த முறைகேட் டில் ஈடுபட்ட ஊராட்சியின் முன்னாள் திட்ட ஒருங்கிணைப்பாளர், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் உட்பட 15ப் கும் மேற்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட் டுள்ளார். மேலும், முறைகேடாக எடுக்கப்பட்ட பணத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் வசூல் செய்து  தேசிய ஊரக வேலை உறுதி திட்டத் தின் வங்கிக் கணக்கில் செலுத்தவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இதற்கிடையே, 100 நாள் வேலை திட்டப் பணிகளை முறை யாக ஆய்வு செய்யத் தவறிய மண் டல துணை வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் இருவர் மீதும் ஒழுங்கு நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பணிக்கு வராதவர்களின் அட்டை களைப் பயன்படுத்தி அரசுப் பணத்தை மோசடி செய்தவர்கள் மீது  எடுக்கப்படும் இந்த நடவடிக்கை யும், பணத்தை வசூலிக்க பிறப்பிக் கப்பட்ட உத்தரவும் கோபி சுற்று வட்டாரப் பகுதியில் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.