tamilnadu

img

வக்பு சொத்துக்களை கைப்பற்ற துடிக்கும் மோடி அரசு

வக்பு சொத்துக்களை கைப்பற்ற துடிக்கும் மோடி அரசு

சமூக நல்லிணக்க மேடை நிகழ்வில் தலைவர்கள் சாடல்

தருமபுரி, மே 3- வக்பு சொத்துக்களை கைப்பற்ற துடிக்கும் மோடி அரசு, வக்பு திருத் தச்சட்டத்தை திரும்பப்பெறும் வரை தொடர் போராட்டம் நடத்துவோம், என சமூக நல்லிணக்க மேடை சார் பில் நடைபெற்ற நிகழ்வில் தலை வர்கள் உரையாற்றினர். வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், என வலி யுறுத்தி சமூக நல்லிணக்க மேடை  சார்பில், தருமபுரி பிஎஸ்என்எல் அலு வலகம் முன்பு கண்டன பொதுக்கூட் டம் நடைபெற்றது. அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் பொ. மு.நந்தன் தலைமை வகித்தார். மனித நேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் என்.சுபேதார் வரவேற்றார். தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர், கலை ஞர்கள் சங்கத்தின் மாநில செயற் குழு உறுப்பினர் பேராசிரியர் சுந்தர வள்ளி சிறப்புரையாற்றினர். சுந்தரவள்ளி பேசுகையில், பஹல் காம் தாக்குதலில் சுற்றுலாப் பயணி களை காப்பாற்றிய இஸ்லாமியர் கள், தீவிரவாத தாக்குதலில் இறந்த வர்களின் உறவினர்களை பத்திரமாக தங்கவைத்து, உணவு கொடுத்து பாதுகாத்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். இந்த ஒற்றுமை தான் இந்தியா. இஸ்லாமியர்கள் உயிரை துச்சமாக மதித்து தீவிரவாதி களிடமிருந்து எங்களை காப்பாற்றி னர், என உயிர் பிழைத்தவர்கள் பத்தி ரிகைகளுக்கு பேட்டியளிததனர். இந்த ஒற்றுமை தான் மோடிக்கு பிடிக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக் களை சந்திக்காமல் பீகார் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றவர் தான் மோடி. சுற்றுலாப் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை. மோடி எல்லா சம்பவத்திலும் அரசி யல் ஆதாயம் தேடுகிறார்.  இந்திய விடுதலை போராட்டத் தில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற் பட்ட இஸ்லாமியர்கள் விடுதலைக் காக போராடி படுகொலை செய்யப் பட்டனர். நாட்டின் விடுதலைக்காக போராடியவர்கள் அமைதியாக இருக் கிறார்கள். அதில் பங்கேற்காத ஒரு கூட்டம் நாட்டை நரவேட்டையாடிக் கொண்டிருக்கிறது. அனைத்து சமூக மக்களோடும் அன்பாக பழகி ஒற்று மையோடு வாழ்ந்து வருபவர்கள் இஸ்லாமியர்கள். இச்சூழலில்தான் வக்பு வாரிய சட்ட திருத்தத்தை மோடி அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் வக்பு சொத்துக்களை கைப்பற் றவே மோடி அரசு முயல்கிறது. இச்சட் டத்தை திரும்பப்பெறும் வரை தொடர் போராட்டம் நடத்துவோம், என்றார். இதில், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட்டச் செய லாளர் இரா.சிசுபாலன், திமுக நகரச் செயலாளர் நாட்டான் மாது, விசிக மாவட்டச் செயலாளர் த.கு. பாண்டியன், சிபிஐ மாவட்டச் செய லாளர் எஸ்.கலைசெல்வன், மதிமுக மாவட்டச் செயலாளர் கோ.ராம தாஸ், சமூக நல்லிணக்க மேடை ஒருங்கிணைப்பாளர் இ.பி.பெரு மாள் தருமபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ், முஸ்லிம் லீக் மாவட் டச் செயலாளர் சிராஜுதின், திரா விடர் கழக மாநில அமைப்பு செயலா ளர் ஊமை.ஜெயராமன், தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டச் செயலாளர் பாபு,  மனிதநேய மக்கள் கட்சி மாநில நிர் வாகி ஒய்.சாதிக்பாஷா, மக்கள் கண் காணிப்பக அமைப்பாளர் செந்தில் ராஜா உட்பட பலர் கலந்து கொண்ட னர்.