எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை தொடர்ந்து நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பட்டது.
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்குத் திருட்டு குறித்து ராகுல் காந்தி எழுப்பிய குற்றச்சாட்டை விவாதிக்கக் கோரி இன்று எதிர்க்கட்சி எம்.பி-க்கள் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கி இருந்தனர். இதனை ஏற்க இரு அவை தலைவர்களும் மறுத்துவிட்டனர். இந்த நிலையில், எதிர்க்கட்சி எம்.பி-க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.