தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில் செயல்பட்டு வரும் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை 2 ஆண்டுகளில் காலி செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம் இருக்கும் தனியாருக்கு சொந்தமான கட்டடத்திற்கு, ஒப்பந்தத்துக்கு மாறாக வாடகையை குறைத்து நிர்ணயித்ததாகவும், இதனால் மாதத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பை சந்தித்ததாகவும், மேலும், குத்தகை காலத்தை நீட்டிக்க மறுத்து, கட்டடத்தை காலி செய்து ஒப்படைக்கக் கோரி, கட்டடத்தின் உரிமையாளர்களான சரத்குமார், வெங்கடேஷ், சவுத்திரி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை 2 ஆண்டுகளில் காலி செய்யும்படி உத்தரவிட்டார். மேலும், கட்டடத்துக்கான வாடகையை ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.13 லட்சமாக உயர்த்தியும், இந்த கூடுதல் தொகை ரூ.2.18 கோடியை 2025 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் மனுதாரர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.